செய்திகள் :

அவள் விருதுகள்: சமூக சேவகி அருணா ராய் முதல் பரணிகா இளங்கோவன் வரை!சாதனைப் பெண்களின் சங்கமம்!

post image

விகடன் குழுமத்திலிருந்து வெளியாகும் பெண்களுக்கான இதழான அவள் விகடனுக்கு இது 29-வது ஆண்டு. சமூக சேவை, இலக்கியம், விவசாயம், விளையாட்டு, சினிமா என பற்பல தளங்களிலும் சிகரம் தொட்டுக் கொண்டிருக்கும் சாதனைப் பெண்களைப் பாராட்டி பெருமைப்படுத்தும் வகையில் அவள் விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது அவள் விகடன்.

அந்த வகையில் 2026-ம் ஆண்டுக்கான அவள் விருதுகள் நிகழ்ச்சி வரும் நவம்பர் 26-ம் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது. 2017-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக அவள் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அவள் விருதுகள்
அவள் விருதுகள்

பெண்கள் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு என அரை நூற்றாண்டுக்கும் மேலாக மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த அருணா ராய்,

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தென்னிந்திய இசை உலகை ஆளும் 'சின்னக்குயில்' கே.எஸ். சித்ரா,

முதல்வர் ஜோசப் விஜயின் அம்மாவும், இசைக் கலைஞருமான ஷோபா சந்திரசேகர்,

`நடிப்பு ராட்சசி' என மக்களின் மனமுவந்த பாராட்டைப் பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகை ரோஜா, 'மொத ராத்திரி' மூலம் அனைவர் மனதிலும் இடம்பிடித்த அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்டப் பல்வேறு சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.

விருதாளர்களைப் பற்றிய முழு விவரங்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://awards.vikatan.com/aval-awards/2026/

நீங்களும் ஆகலாம் IAS: 'சேவையைத் தேர்ந்தெடுங்கள்; பதவியை அல்ல..' - சென்னையில் நடைபெற்ற பயிற்சி முகாம்

ஆனந்த விகடன் மற்றும் KingMakers IAS Academy இணைந்து நடத்திய 'நீங்களும் ஆகலாம் IAS' விழிப்புணர்வு நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், குடிமைப் பணித் தேர்வுகள... மேலும் பார்க்க