Dhoni : 'ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட், என்றென்றும் எங்கள் தல.!'- தோனி குறித...
Dhoni : 'எங்களின் ஒரே ஏக்கம் இதுதான்..!' - தோனியின் ஓய்வு குறித்து ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி சி.எஸ்.கே அணியின் மென்டராக தோனி இருப்பார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
தோனியின் இந்த ஓய்வு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அப்பதிவில், "தோனி நமக்கு கோப்பைகளை விட மிக அதிகமாகவே கொடுத்திருக்கிறார். தலைமுறைகளை ஒன்றிணைத்து, கிரிக்கெட்டையும் தாண்டிய ஒரு பாசப்பிணைப்பை அவர் நமக்குள் உருவாக்கியிருக்கிறார்.
அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு நாள் முடிவு வரத்தான் வேண்டும். தமிழகத்தின் அன்புக்குரிய வளர்ப்பு மகனுக்கு தகுதியான முறையில் பிரியாவிடை அளிக்க, கடைசியாக ஒரு வாய்ப்பு கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே எங்களின் ஒரே ஏக்கம்.
எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களுக்கும், புகழ்பெற்ற வெற்றிகளுக்கும், நாங்கள் என்றென்றும் போற்றக்கூடிய நினைவுகளுக்கும் நன்றி தோனி. சிஎஸ்கே அணியின் வழிகாட்டியாக உங்களின் இந்த புதிய இன்னிங்ஸில் நீங்கள் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வந்தார். தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. கடைசியாக 2023 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb


















