Dhoni : 'ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட், என்றென்றும் எங்கள் தல.!'- தோனி குறித...
Dhoni : 'ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட், என்றென்றும் எங்கள் தல.!'- தோனி குறித்து ருதுராஜ் எமோஷனல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி சி.எஸ்.கே அணியின் மென்டராக தோனி இருப்பார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
தோனியின் இந்த ஓய்வு அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அப்பதிவில், 'எளிமை'... 2019-ல் சிஎஸ்கே அணியில் முதன்முதலில் இணைந்தபோது, உங்களை முடிந்தவரை அருகிலிருந்து கவனித்ததன் மூலம் இந்த வார்த்தையின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டேன்.
பல ஆண்டுகளாக நீங்கள் குவித்த சாதனைகளைக் காட்டிலும், உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் இதுதான்!
உங்களுடன் ஒரே டிரெஸ்ஸிங் ரூமைப் பகிர்ந்துகொள்வது, மைதானத்தில் ஒன்றாக விளையாடுவது, 22 யார்டு ஆடுகளத்தில் உங்களுடன் இருப்பது, இணைந்து போட்டிகளை வெல்வது... இவை அனைத்தும் கனவுகள் நனவானதைப் போன்றவை!. நீங்கள் எப்போதும் எங்களின் தல, எங்களின் கேப்டன், எங்களின் தலைவர். எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய்!

சில நடைப்பயணங்கள் விடைபெறுதல்கள் அல்ல, அவை என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகள்.
ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட்... என்றென்றும் எங்கள் தல! மீண்டும் சந்திப்போம்" என்று எமோஷனலாகப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb


















