செய்திகள் :

Dhoni : நிறைவேறாத ஆசையுடன் ஓய்வு பெற்ற தோனி! - பின்னணி என்ன?

post image

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு சீசனுக்கும் தோனி ஆடுவாரா மாட்டாரா எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். இறுதியில் தோனி சர்ப்ரைஸ் கொடுத்து களத்தில் இறங்கிவிடுவார். ஆனால், இந்த சீசன் அப்படியில்லை. தோனி ஓய்வை அறிவித்துவிட்டார். ஒரு நிறைவேறாத ஆசையுடன் தோனி ஓய்வை அறிவிப்பதுதான் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்திருக்கிறது.

மகேந்திர சிங் தோனி

இந்திய அணிக்காக 2019 உலகக்கோப்பையில் தோனி கடைசியாக ஆடியிருந்தார். 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை பெறுவதாக அறிவித்தார்.

அப்போதிருந்தே ஐ.பி.எல் போட்டிகளிலும் தோனியின் ஓய்வு குறித்து பேசப்பட்டுக் கொண்டே இருந்தது. 2020 இல் துபாயில் நடந்த சீசனில் சென்னை அணி மிக மோசமாக ஆடி ப்ளே ஆப்ஸூக்கு கூட செல்லாமல் தோற்றிருக்கும். அந்த சீசனின் கடைசிப் போட்டியில், 'இதுதான் உங்களின் கடைசிப் போட்டியா?' என டேனி மோரிசன் கேட்க, 'Definitely Not' என தோனி பதில் கூறியிருப்பார். 2021 சீசனை சென்னை அணி வென்றிருக்கும்.

தோனி - சிஎஸ்கே
தோனி - சிஎஸ்கே

அப்போது சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்திருக்கும். அதில் பேசிய தோனி, 'தமிழ்நாடு எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு விளையாட்டை எப்படி அணுக வேண்டுமென சென்னை ரசிகர்கள் கற்பித்திருக்கிறார்கள். ராஞ்சிக்கு பிறகு சென்னை எனக்கு இன்னொரு வீடு போல மாறிவிட்டது. என்னுடைய கடைசிப் போட்டியை சென்னை மைதானத்தில் வைத்து ஆட விரும்புகிறேன். அது அடுத்த ஆண்டாக இருந்தாலும் சரி, இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தானாலும் சரி. சென்னை ரசிகர்கள் முன்பே ஓய்வை அறிவிக்க விரும்புகிறேன்' எனக் கூறியிருந்தார்.

அதன்பிறகுமே தோனி 5 சீசன்கள் ஆடியிருந்தார். ஆனால், அவர் நினைத்ததை போல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவரால் கடைசிப் போட்டியை ஆடி ஓய்வை அறிவிக்க முடியவில்லை. 2027 சீசனில் அந்த ஆசை நிறைவேறும் என எதிர்பார்க்கப்பட்டது. 2027 க்குப் பிறகு மெகா ஏலம் என்பதால் தோனியும் இன்னும் ஒரு சீசனில் ஆடிவிட்டு ஓய்வை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கம் போல தோனி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.

"சீதா ராம்... சீதா ராம்!" – சேவாக்குடன் போட்டியின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த மகன் ஆர்யவீர்

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டி… 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது… தந்தையிடம் மனம் திறந்த 15 வயது ஆர்யவீர்!இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட வீரேந்திர சேவாக், த... மேலும் பார்க்க

நிதியை நிறுத்திய SAI; பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பாய் - திணறும் பேட்மிண்டன் வீரர்கள்! என்ன பிரச்னை?

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI - Badminton Association of India) இடையே வீரர்களின் போட்டிப் பயணத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட... மேலும் பார்க்க

NZ vs IND: 'இந்தத் தோல்வி எனக்கு கவலையை ஏற்படுத்திருக்கு, ஏன்னா.!'- கௌதம் கம்பீர் வருத்தம்

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி... மேலும் பார்க்க

``மாணவர்களின் திறமை, நிர்வாக அலட்சியத்தால் முடக்கப்படக் கூடாது" - அண்ணாமலை

தேசிய வில்வித்தைப் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி நகரில் தொடங்கவுள்ள நிலையில், தமிழக வீரர்களுக்கான தேர்வுப் போட்டிகள் இன்னும் நடைபெறவில்லை என வி தி லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்ட... மேலும் பார்க்க

`அதற்கு முன் அப்படி செய்யவில்லை என யார் சொன்னது?' - மௌனம் கலைத்த கவாஜா; மீண்டும் வெடிக்கும் சர்ச்சை

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை உலுக்கிய 'சாண்ட்பேப்பர்' பந்து சேதப்படுத்தல் சர்ச்சை குறித்து, பல வருடங்களாக நிலவி வந்த மௌனத்தை உடைத்திருக்கிறார் அந்த அணியின் மூத்த வீரர் உஸ்மான் கவாஜா. 2018-ல் தென் ஆப்பிரிக்... மேலும் பார்க்க

“நன்றி, டெஸ்ட் கிரிக்கெட்” எண்ணற்ற காயங்கள்; அளவற்ற சாதனைகள்... டெஸ்ட் பயணத்துக்கு விடைகொடுத்த ஷமி!

காயங்கள் எத்தனை முறை முடக்கியபோதும், ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து களத்தில் நின்றவர். இந்திய டெஸ்ட் அணியின் வெள்ளைச் சீருடையை மீண்டும் அணிந்துவிட மாட்டோமா என்ற நம்பிக்கையோடு காத்திருந்தவர். அப்படி பல ... மேலும் பார்க்க