செய்திகள் :

சூரசம்ஹாரம்: 'முருகனுடன் முதல்வர் விஜய்யை ஒப்பிட்டேனே?' - புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்

post image

திருச்செந்தூரில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி முதல்வர் விஜய்யை கடவுள் முருகனுடன் ஒப்பிட்டு பாடல் பாடியதாகச் சர்ச்சை எழுந்தது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்து புஷ்பவனம் குப்புசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில்,

"திருச்செந்தூரில் நடந்த இசைநிகழ்ச்சியில் நான் பாடிய பாடலில் குறை சொல்லி பலரும் என்னைத் திட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் திட்டுகின்ற அளவுக்கு நான் எதுவும் பாடவில்லை. திட்டுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. பாராட்டுகிற நீங்கள்தானே திட்டுகிறீர்கள். ஆனால், எதற்காகத் திட்டுகிறோம் என்று தெரிந்து திட்ட வேண்டும்.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்

நான் பாடிய பாடலில் எந்தக் குறையும் இல்லை. நான் பாடியது இதுதான். 'நம் தமிழக முதல்வர் போல் வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு'. யாருக்கு வெற்றி நிச்சயம் உண்டு? நம்முடைய தமிழக முதல்வர் வேண்டிக் கொண்டது போல் நாமும் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயம் உண்டு என்று சொல்லி இருக்கிறேன்.

வேல் எடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டும் வரம் கேளுங்கள் வெற்றி உண்டு வாருங்கள் என்று முதல்வரை நான் சாட்சியாகச் சொல்லி இருக்கிறேன். நீங்களும் வேண்டும் வரம் கேட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லி இருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து என்னைத் திட்டுகிறீர்கள்.

முருகனுக்கு ஏராளமான பாடல்கள் நான் பாடி இருக்கிறேன். தமிழ் அறிந்த நான் இதில் பிழை செய்வேனா முருகனுடன் ஒப்பிட்டு பாடி இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். எங்கே ஒப்பீடு இருக்கிறது. சாட்சியாகத்தான் அவரை வைத்திருக்கிறேன்.

புஷ்பவனம் குப்புசாமி
புஷ்பவனம் குப்புசாமி

முருகனுடன் அவரை ( முதல்வர் விஜய்) ஒப்பிடவில்லை. ஆகவே, முருகப்பெருமானின் அருள், பேரருள் அதற்கு நிகர் எதுவும் கிடையாது. அவருக்கு நிகர் யாருமில்லை. ஆகவே, இதைப் புரிந்து கொள்ளுங்கள். நான் யாரையும் ஒப்பிடவோ, குறை சொல்லவோ இல்லை. முருகப் பெருமானைப் பாடி இருக்கிறேன். அவ்வளவுதான் இதை அறிந்து கொண்டு மேற்கொண்டு திட்டுவதை விட்டுவிடுங்கள்" எனப் பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' - என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியிருக்கிறார். அதில் அவர் அரசியல்ரீதியாக குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கு... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி. மீன்பிடித் தொழில், விவசாயப் பாசனம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் இந்த ஏரி, குப்பைகள் கொட்டப்படும... மேலும் பார்க்க

மதுரை தனிஷிக் நகைக்கடையில் மீட்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள நகைகள்; காட்சிப்படுத்திய போலீஸ்| Photo

மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மத... மேலும் பார்க்க

"சு.வெ-வின் பயணச் சலுகையை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.!"- நீதிபதி சுவாமிநாதனுக்கு சண்முகம் கண்டனம்

"உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தொடுக்கும் தனிநபர் தாக்குதல், நீதித்துறை நெறிகளுக்கு முரணானது. அவர் மீதி உரிய நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விட... மேலும் பார்க்க