செய்திகள் :

பஞ்சாப் காவலர் கொலை; காவல்துறையினருக்கு மிரட்டல்; பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்?

post image

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்குச் சற்று முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

சுஜான்பூர் காவல் நிலையத்தில் வயர்லெஸ் ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தவர் வினோத் குமார் (42).

பயிற்சிக்காக சங்ரூர் சென்றிருந்த இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது சகோதரருக்கு போன் செய்து, மான்கவுர் பைபாஸ் பகுதியில் இருந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.

சுட்டுக்கொலை
சுட்டுக்கொலை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள்...

ஆனால், வினோத் குமாரின் சகோதரர் அங்குச் சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. இதையொட்டி, இவரைத் தீவிரமாகத் தேடிய நிலையில், பைபாஸ் அருகே தலையில் பலத்த காயங்களுடன் வினோத் குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சூழலில், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு செயல்படும் ‘தெஹ்ரீக்-இ-தலிபான் இந்துஸ்தான்’ என்ற பயங்கரவாத அமைப்பு, சமூக வலைத்தளங்களில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. மேலும், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் அந்தப் போஸ்டரில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் காவலர்கள்?

இருந்தாலும், இந்தப் போஸ்டரின் உண்மைத்தன்மை குறித்தோ அல்லது பயங்கரவாத அமைப்பின் இந்த உரிமைகோரல் குறித்தோ பஞ்சாப் காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

பஞ்சாபில் காவல்துறையினரைக் குறிவைத்து அடுத்தடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டில் மட்டும் ஊர்க்காவல் படை வீரர் உட்பட 5 காவலர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.க-வினர் கைது - கட்சிப் பதவியும் பறிப்பு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணி... மேலும் பார்க்க

சென்னை: பணம் வாங்கிக் கொண்டு போக்சோ வழக்கு பதிவு - பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணா (40). இவர் திருமண இணையதளம் மூலம் வரன் தேடி வந்தார். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்த பெண்ணின் விவரங்களைப் பார்த்ததும் சுரேஷ் கண்ணாவுக்கு பிடித்... மேலும் பார்க்க

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்!

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற... மேலும் பார்க்க

`காதல், போதைப்பொருள், பாக்., தொடர்பு' ராஜஸ்தான் குண்டுவெடிப்பில் பஞ்சாப் இளம்பெண் சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காபூர் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் கடந்த 2ம் தேதி வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் பகுதியை சேர்ந்த மஹதீப் கவுர்(21) என்ற பெண்ணும், தேவிந்தர் சிங... மேலும் பார்க்க

மதுரை நகைக்கடையில் ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை; சிக்கிய தோழி; எஸ்கேப் ஆன திருடன்; நடந்தது என்ன?

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் 11.62 கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை முகமூடி அணிந்த ஒருவன் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த... மேலும் பார்க்க