செய்திகள் :

திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" - டாக்டர் கிருஷ்ணசாமி

post image

"ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?" என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்ற கார்த்திகை தீபம் விவகாரம்
திருப்பரங்குன்றம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, கடந்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது.

திமுக அரசைப் போலவே, தவெக அரசும் மலையின் உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று முட்டுக்கட்டைப் போடுவது முறையானதல்ல. ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும், அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதும் நியாயமாகுமா?

தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல. மரணம் அடைந்தவர்களையோ, உருவ வழிபாட்டு முறைகளையோ இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும், நாகூர் தர்ஹா உட்பட எந்தப் பகுதியிலும் உள்ள தர்ஹாக்களையும், அனைத்து இஸ்லாமியர்களும் அதைப் பொதுவானதாகக் கருதி வழிபடுவதில்லை. எனவே, திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்ஹாவை காரணம் காட்டி ஒட்டுமொத்த இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க வேண்டிய அவசியமில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றம் உச்சியில் இருக்கும் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கமாகும். ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பான்மை இந்து மக்களின் வழிபாட்டு உரிமையை மதித்து, உச்சித் தூணில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிப்பதற்குப் பதிலாக, இஸ்லாமியர்களை வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து, தீபம் ஏற்றுவது இந்து மக்கள் சார்ந்த விஷயமல்ல என தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதிடுவது மதப் பிணக்குகளை அரசே ஊக்கப்படுத்துவதற்குச் சமமாக அமையும்.

அரசின் நடவடிக்கைகள் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் தவிர, எந்த விதத்திலும் பிணக்குகளை உருவாக்கும் வகையில் அமைந்திடக்கூடாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் ’தீபம்’ ஏற்றுவது இந்து மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; இஸ்லாமியர்களின் வழிப்பாட்டு உரிமையும் சம்பந்தப்பட்டது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதிட்டது தவறானதாகும். இது முழுக்கமுழுக்க இந்துக்களின் உணர்வும், உரிமையும் சம்பந்தப்பட்ட விஷயம்.

எனவே, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு திருப்பரங்குன்ற மலை உச்சி தீபத் தூணில் ’கார்த்திகை தீபம்’ ஏற்றுவதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அண்ணன் சீர் திட்டம்: `8 கிராம் தங்க நாணயம் & பட்டுப்புடவை' - விண்ணப்பிப்பது எப்படி?

`அண்ணன் சீர்' திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இந்த அண்ணன் சீர் திட்டத்தின் மூலம், திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் எ... மேலும் பார்க்க

'என் வீட்டுல 22 வருசமா வேலை பார்க்குறாங்க'- பணிப்பெண்ணை விஜய்யிடம் அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி

டெல்லியில் நேற்று (16.11.2026) நடைபெற்ற சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். அப்போது விஜய்யைச் சந்தித்த பிரியங்கா காந்த... மேலும் பார்க்க

SIR: `உ.பி-யில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்'- விளக்கம் கேட்ட யோகி ஆதித்யநாத்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) பிறகு உத்தரப்பிரதேச மாநில வாக்காளர் பட்டியலில் இந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணிடம் தகராறு செய்த தவெக நிர்வாகி – கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் மகாராஜன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்யா. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மகாராஜன், கட்சியின் பல்வேறு நிகழ்ச்ச... மேலும் பார்க்க

இஸ்ரேல் அதிபராக தொடர நெதன்யாகுவின் ஐடியா; ஒத்துழைக்காத எதிர்க்கட்சி! இன்னும் எத்தனை நாள் கெடு?

இஸ்ரேலில் தேர்தல் முடிவுகள் வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த நாட்டில் இன்னும் யாரும் ஆட்சி அமைக்கவில்லை.பெரும்பான்மை பெறாத இஸ்ரேல் கட்சிகள்இஸ்ரேல் நாடாளுமன்றம் நெசட்டில் பெரும்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: `இதே எடப்பாடியாராக இருந்திருந்தால்...'- அதிமுக பா.வளர்மதி பேச்சு

தவெக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாக வெடித்திருக்கும் விவகாரம், பெரும் சர்ச்சையாகி இருக்கும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி சார்பில் ... மேலும் பார்க்க