திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" - டாக...
"சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரத்தான் வேண்டும்!"- தோனி ஓய்வு குறித்து சாக்ஷி தோனி நெகிழ்ச்சி!
ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரது மனைவி சாக்ஷி தோனி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் களத்தில் தோனியின் நீண்டகாலப் பயணம் முடிவுக்கு வந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மென்டராக அவர் புதிய அவதாரம் எடுத்துள்ள தருணத்தில் சாக்ஷி தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து சாக்ஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ``அழகான புதிய அத்தியாயங்கள் தொடங்குவதற்காக, சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரத்தான் வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக மஹியை நேசித்து, ஆதரவளித்து, அவர் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் - எங்களுக்கு உங்களைத் தனிப்பட்ட முறையில் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் - எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், ரசிகர்களின் அன்பிற்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இந்த எல்லையற்ற அன்பிற்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். புதிய தொடக்கங்கள், புதிய சாகசங்கள் மற்றும் இன்னும் பல அழகான நினைவுகளுக்காக வாழ்த்துகள். உங்களை நினைத்து எப்போதும் மிகவும் பெருமைப்படுகிறேன் மஹி!" எனத் தனது காதலையும் பெருமிதத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
வீரராகத் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்த சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு, சாக்ஷியின் இந்த உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் ஆறுதலையும், 'மென்டர்' என்ற தோனியின் புதிய பயணத்திற்கான உத்வேகத்தையும் அளித்துள்ளன.















