செய்திகள் :

`சார், என் மனைவி அழுதுகொண்டிருக்கிறார் என கம்பீரிடம் சொன்னேன்.!' - வதந்திகளால் உடைந்த சர்ஃபராஸ் கான்

post image

இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த இக்கட்டான சூழலில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனக்கும் தனது தந்தைக்கும் தொலைபேசியில் அழைத்து ஆதரவளித்ததாகவும் பேட்ஸ்மேன் சர்ஃபராஸ் கான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ராவுடன் உரையாடியபோது, இந்த வதந்திகள் பரவிய சமயத்தில் நடந்த நிகழ்வுகளை சர்ஃபராஸ் கான் பகிர்ந்து கொண்டார்.

"பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிந்து சுமார் 20-25 நாட்கள் ஆகியிருந்தது. அந்த தொடரின்போது ஏற்பட்ட காயத்திற்காக நான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) மறுவாழ்வுப் பயிற்சியில் இருந்தேன்.

சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan)
சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan)

திடீரென, நான் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டதாக செய்திகள் பரவத் தொடங்கின. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் எனக்கு அழைப்புகளும், மெசேஜ்களும் வரத் தொடங்கின. சமூக வலைதளங்களில் பலரும் இதைப் பற்றி எழுதினர். யாரிடம் பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை, மிகுந்த வேதனையடைந்தேன்," என்று அவர் கூறினார்.

இந்த வதந்திகளால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக தனது தொலைபேசியை அணைத்து வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட சர்ஃபராஸ், அப்போது கௌதம் கம்பீர் தனக்கு உதவியதை நினைவுகூர்ந்தார். "ஜிஜி சார் (கௌதம் கம்பீர்) எனக்கு இரண்டு முறை அழைத்தார்.

'இவையெல்லாம் பயனற்ற பேச்சுக்கள், இந்த அரசியலில் சிக்கிக்கொள்ளாமல் உன் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்து' என்று அவர் அறிவுறுத்தினார். அவரிடம் நான், 'சார், நான் இதைப் புரிந்துகொள்கிறேன், ஆனால் என் தந்தை மிகவும் சோகமாக இருக்கிறார், என் மனைவியும் அழுதுகொண்டிருக்கிறார்' என்று சொன்னேன்," என்றார் சர்ஃபராஸ்.

தன்னிடம் பேசிய பிறகு, கம்பீர் தனது தந்தையிடமும் பேசி ஆறுதல் கூறியதாக சர்ஃபராஸ் தெரிவித்தார். "ஜிஜி சார் என் தந்தையிடம் பேசி, இது போன்ற பேச்சுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், சர்ஃபராஸ் ஒரு நல்ல கிரிக்கெட் வீரர், அவரை நிம்மதியாக விளையாட விடுங்கள் என்றும் கூறினார்.

கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர்

மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறும் என் தந்தையிடம் அவர் தெரிவித்தார். அந்த நேரத்தில் எனக்கு முதலில் போன் செய்தது அவர்தான்," என்று சர்ஃபராஸ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த சர்ஃபராஸ் கான், "அப்படி எதுவும் நடக்கவே இல்லை. ஒருவேளை நான் தவறு செய்திருந்தால், எனக்கு இந்தியா ஏ அணியிலும், அதன்பிறகு இலங்கை தொடரிலும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

இந்த வதந்தியை யார் பரப்பினார்கள் என்று தெரியவில்லை. அந்த சமயத்தில் நான் சிலரை அழைக்க முயன்றபோது, என் அழைப்புகள் கூட ஏற்கப்படவில்லை. அது என் குடும்பத்திற்கு மிகவும் மோசமான ஒரு காலகட்டம்," என்று வேதனையுடன் கூறினார்.

மதுரை: 'தல தோனி' முழக்கம்.... தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை!

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இருப்... மேலும் பார்க்க

தோனி புகைப்படம், கிரிக்கெட் பேட்டுக்கு சிறப்புப் பூஜை – மதுரையில் தோனி ரசிகர்கள் நெகிழ்ச்சி | Photos

தோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைதோனி சிறப்பு பூஜைIPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப... மேலும் பார்க்க

IPL 2027: தோனி ஓய்வு; ஸ்டார்க் - போல்ட் விடுவிப்பு - வரும் ஐபிஎல் மினி ஏலம் எப்படி இருக்கும்?

ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 அணிகளும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை அணிகள் எடுத்திருக்கும் அதிரடி... மேலும் பார்க்க

Dhoni: "நீங்கள் இல்லாமல் ஆட்டம் இனி பழைய மாதிரி இருக்காது; ஆனால்..." - தோனி குறித்து தனுஷ்

தோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் ஆடி வந்தார். தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது. கடைசியாக 20... மேலும் பார்க்க

IPL 2027 இல் இருந்து விலக காரணம் என்ன? டிராவிஸ் ஹெட் விளக்கம்

ஐபிஎல் 2027 தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹை... மேலும் பார்க்க