செய்திகள் :

நெருங்கிய உறவுக்குள் திருமணம்: `மத்திய அரசு பரிசீலிக்கலாம்' - உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

post image

இந்திய சமூகத்தில் பல ஆண்டுகளாக சில பகுதிகளில் பாரம்பரியமாக தொடர்ந்து வரும் உறவுக்குள் திருமணங்கள் குறித்து தற்போது சட்டம், மருத்துவம் மற்றும் சமூக ரீதியான விவாதங்கள் எழுந்துள்ளன.

நெருங்கிய இரத்த உறவினர்களுக்கு இடையேயான திருமணங்களை (Consanguineous Marriages) கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

திருமணம்

அப்போது, பெற்றோர், தாத்தா-பாட்டி வழி உறவுகள் போன்ற நெருங்கிய இரத்த தொடர்புடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்கள் குறித்து நீதிமன்றம் நேரடியாக கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்றும், இதுபோன்ற சமூக சீர்திருத்தம் தொடர்பான முடிவுகள் சட்டமன்றத்தின் வரம்புக்குள் வருவதாகவும் தெரிவித்தது.

நெருங்கிய இரத்த உறவினர்களுக்கிடையே திருமணம் நடைபெறும் போது, குழந்தைகளுக்கு சில மரபணு (Genetic) பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் சில மறைந்துள்ள மரபணு குறைபாடுகள், பெற்றோர் இருவரிடமும் இருந்து குழந்தைகளுக்கு கடத்தப்படும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

அதே நேரத்தில், இந்தியாவில் சில சமூகங்களில் உறவினர் திருமணங்கள் பல தலைமுறைகளாக கலாசார நடைமுறையாக இருந்து வருகின்றன. குடும்ப உறவுகளை பாதுகாப்பது, பாரம்பரிய பழக்கங்கள் போன்ற காரணங்களால் இந்த நடைமுறைகள் தொடர்கின்றன.

உச்சநீதிமன்றம்!

இந்த நிலையில், திருமண உரிமை, சமூக மரபுகள் மற்றும் குழந்தைகளின் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்துவது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உறவுக்குள் திருமணம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் தேவையான சட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் கருத்தாக உள்ளது.

தற்போது, இதுபோன்ற திருமணங்களுக்கு நாடு முழுவதும் பொதுவான தடை எதுவும் இல்லை. மத்திய அரசு இதுகுறித்து எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

பவன் கல்யாண் : 'ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி' - கவனம் பெறும் ரேணு தேசாய் அன்று சொன்ன கருத்து

ஆந்திராவின் துணை முதல்வராகவும், பிரபல நடிகராகவும் உள்ள பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னா கொனிடேலாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், அவரது முன்னாள் மனைவி ரேணு தேசாய் பல ஆண்டுகளுக... மேலும் பார்க்க

திருநங்கை ரேவதி : "இது என்னடா வேஷம்?" – "இதுதான் நிஜம்" - அவமானங்களைக் கடந்தவளின் பார்வையில் டோரதி

கட்டுரையாளர்: திருநங்கை ரேவதி`உணர்வும் உருவமும்’ புத்தகத்தின் மூலம் திருநங்கைகளைச் சமூகம் புரிந்துகொள்ள வழிகாட்டியவர் ரேவதி. சமீபத்தில் வெளியான ‘டோரதி’ படத்தைத் தன் வாழ்க்கையின் மறுபக்கம் என்று சொல்லு... மேலும் பார்க்க