செய்திகள் :

குமரி: சிறுமியை கடத்தி யாசகம் எடுக்க வைக்க முயன்ற தாய்மாமன் - அதிரடியாக கைது செய்த போலீஸார்!

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் குடும்பம் குடும்பமாக சுற்றி திரியும் யாசகர் சிலர் இரவு நேரம் குளச்சல் காவல் நிலையம் எதிரே செயல்பட்டு வரும் ஆவின் பாலகம் அருகே படுத்து தூங்குவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி மாலை மிடலாம் உதயமார்த்தாண்டம் நடுத்தேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குளச்சல் பகுதியில் நடந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு குளச்சல் ஆவின் பாலகம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது சாலையோரம் நின்று விளையாடிக் கொண்டிருந்த அவரது மகளான 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். அந்த சுற்றுவட்டார பகுதிகளில் தேடியதுடன், உறவினர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று விசாரித்தும் சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மறுநாள் குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்த போலீஸார் அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியின் தாய்மாமன் முறையான இசக்கியப்பன் என்பவர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை பைக்கில் அழைத்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து இசக்கியப்பனின் செல்போன் லொக்கேஷனை கண்காணித்து வந்த போலீஸார் 4 நாட்களுக்கு பின் கடந்த வியாழக்கிழமை அன்று டவர் லொக்கேஷன் மூலம் இசக்கியப்பன் கோவில்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் இருப்பதை கண்டறிந்தனர். அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டதோடு இசக்கியப்பனை குளச்சல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

யாசகம்

விசாரணையில் சிறுமியின் தாய் மாமன் முறையான இசக்கியப்பனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று தனது தங்கை வீட்டில் அடைத்து வைத்ததுடன், சிறுமியை யாசகம் எடுக்க வைக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து இசக்கியப்பன் மீது சிறுமியை கடத்தி யாசகத்திற்கு பயன்படுத்த முயன்றது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் போலீஸார் அவரை கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

சிறுமியை கடத்தி பிச்சையெடுக்க வைக்க முயன்ற இசக்கியப்பன்

அதே சமயம், இசக்கியப்பன் சிறுமியை இரண்டாவதாக திருமணம் செய்ய முயன்றதாகவும், அதற்கு மறுத்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் இன்னொரு தகவலும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சிறுமியை தாய் மாமனே கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர்: பெண் உட்பட இருவர் வெட்டிக்கொலை - பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்!

திருப்பத்தூர் மாவட்டம், தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகரில் உள்ள தனியார் காலிமனை பகுதிக்கு பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் காரில் இன்று பிற்பகல் வேளையில் வந்தார். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர்கள... மேலும் பார்க்க

சென்னை: ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் - பின்னணியில் பிரபல போதை மாஃபியா டீம்!

சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை முழுவ... மேலும் பார்க்க

`விவாகரத்து செய்துவிடுவார் என்று பயந்தேன்' - கணவரின் தோழியை ரூ.13 லட்சம் கொடுத்து கொன்ற மனைவி

புனே விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் வர்ஷா(23). இவர் தனது இரண்டரை வயது மகளுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட சென்றார். அங்கு அவர் தனது ஆண் நண்பரான தொழிலதிபர் நில... மேலும் பார்க்க

வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டில் சிக்கிய 37 பேர்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பீகார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இது போன்ற சூதாட்டம் வாட்ஸ் ஆப் மூலம் நடப்ப... மேலும் பார்க்க

மும்பை தாதா சோட்டா ராஜனை கொலை செய்ய அனுப்பப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி - உ.பி.யில் சுட்டுக்கொலை

டெல்லியில் சட்ட அமைச்சர் கபில் சர்மா அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி நடந்த கொலை தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி நசீம் துரானி என்பவனை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 16ம் தேதி வடகிழக்கு டெல்லியின் கஜூ... மேலும் பார்க்க

"இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பில்லை" – தனிஷிக் நகைக்கடை திருட்டில் கைதான நிஷாந்த்

மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காவல்துறை தரப்பில் நிஷாந்தை ஐந்து ந... மேலும் பார்க்க