செய்திகள் :

`விவாகரத்து செய்துவிடுவார் என்று பயந்தேன்' - கணவரின் தோழியை ரூ.13 லட்சம் கொடுத்து கொன்ற மனைவி

post image

புனே விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் வர்ஷா(23). இவர் தனது இரண்டரை வயது மகளுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு தீபாவளியை கொண்டாட சென்றார். அங்கு அவர் தனது ஆண் நண்பரான தொழிலதிபர் நிலேஷ் அகர்வால் என்பவருடன் வெளியில் சென்றார். அவர்கள் இருவரும் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் இருக்கும் கோண்டியா வனப்பகுதிக்கு சென்றனர். இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்தனர். அவர்கள் வனப்பகுதியில் கோயில் ஒன்றின் அருகே இருந்தபோது முகமூடி அணிந்து வந்த மூன்று பேர் வர்ஷாவை கத்தியால் பல முறை குத்திக்கொலை செய்தனர்.

இக்கொலை குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் உள்ளூர் கிரிமினல் இம்ரான் ஷேக் என்பவனது முகம் தென்பட்டது.

கொலை நடந்த இடம்

உடனே அவனை பிடித்து விசாரித்தபோது இக்கொலையை திட்டமிட்டது நிலேஷ் அகர்வால் மனைவி மோனா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து மோனாவை பிடித்து விசாரித்தபோது, மோனாவிற்கு அவரது கணவர் நிலேஷ் வர்ஷாவுடன் தொடர்பு வைத்திருந்தது பிடிக்கவில்லை. இந்த தொடர்பு காரணமாக தன்னை கணவர் விவாகரத்து செய்துவிடுவாரோ என்று மோனா அச்சம் அடைந்தார். இதையடுத்து வர்ஷாவை கொலை செய்ய மோனா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் குனால் என்பவரை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார். இதில் 13 லட்சம் கொடுத்து வர்ஷாவை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. குனால் தனக்கு தெரிந்த உள்ளூர் கிரிமினல் ஷாருக் பதான் என்பவனை தொடர்பு கொண்டு இக்கொலைக்கான ஒப்பந்தத்தை கொடுத்தார்.

அதன் அடிப்படையில் ஷாருக் தனக்கு தெரிந்த இம்ரான் ஷேக், நெய்லான் ஷேக், கிரிஷ் ராவுத் ஆகியோரிடம் இப்பணியை ஒப்படைத்தார். நிலேஷ் பயன்படுத்திய கார் மோனா பெயரில் வாங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த காரில் ஜி.பி.எஸ் பொருத்தி அதன் செயல்பாட்டை கண்காணிக்க தொடங்கினர். காரின் நடமாட்டத்தை பின் தொடர்ந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் கார் நின்றதும் வர்ஷாவை மூன்று பேரும் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக மோனா, ஷாருக், குனால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர்.

வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டில் சிக்கிய 37 பேர்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பீகார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இது போன்ற சூதாட்டம் வாட்ஸ் ஆப் மூலம் நடப்ப... மேலும் பார்க்க

மும்பை தாதா சோட்டா ராஜனை கொலை செய்ய அனுப்பப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி - உ.பி.யில் சுட்டுக்கொலை

டெல்லியில் சட்ட அமைச்சர் கபில் சர்மா அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி நடந்த கொலை தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி நசீம் துரானி என்பவனை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 16ம் தேதி வடகிழக்கு டெல்லியின் கஜூ... மேலும் பார்க்க

"இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பில்லை" – தனிஷிக் நகைக்கடை திருட்டில் கைதான நிஷாந்த்

மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காவல்துறை தரப்பில் நிஷாந்தை ஐந்து ந... மேலும் பார்க்க

கல்லூரிக்குச் சென்ற மாணவியை தடுத்து ஊர் சுற்றிய வாலிபர் - போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி வ... மேலும் பார்க்க

இரண்டாவதும் பெண் குழந்தை... பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் - தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

ராமேஸ்வரம், சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி (30) இவருக்கும், லோகநந்தினி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலை... மேலும் பார்க்க

அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ம... மேலும் பார்க்க