செய்திகள் :

மும்பை தாதா சோட்டா ராஜனை கொலை செய்ய அனுப்பப்பட்ட தாவூத் இப்ராகிம் கூட்டாளி - உ.பி.யில் சுட்டுக்கொலை

post image

டெல்லியில் சட்ட அமைச்சர் கபில் சர்மா அலுவலகம் அருகில் கடந்த 16ம் தேதி நடந்த கொலை தொடர்பாக தாவூத் இப்ராகிம் கூட்டாளி நசீம் துரானி என்பவனை போலீஸார் தேடி வந்தனர். கடந்த 16ம் தேதி வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில், சமீர் என்பவரை நோக்கி துரானி 20 முறை துப்பாக்கியால் சுட்டு கொன்றான். தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா சகீலுக்கு மிகவும் நெருக்கமான துரானி மீது கொலை, கொலை முயற்சி என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவனைப்பற்றி தகவல் கொடுத்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் கொடுக்கப்படும் என்று போலீஸார் அறிவித்து இருந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் துரானி பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே டெல்லி போலீஸாரும், நொய்டா சிறப்பு அதிரடிப்படையினரும் சேர்ந்து துரானியை சுற்றி வளைத்து சரணடையும்படி தெரிவித்தனர். ஆனால் அவன் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டான்.

இதையடுத்து அவன் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த துரானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.

ஆனால் அதற்குள் இறந்து போனான். துரானியிடம் தாவூத் இப்ராகிம் கூட்டாளி சோட்டாசகீல் மும்பை தாதா சோட்டாராஜனை கொலை செய்யும் பணியை கொடுத்து இருந்தான் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான்-கனடா பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கிலும் துரானிக்கு தொடர்பு இருக்கிறது.

நசீம் துரானியின் கும்பல், கிழக்கு மற்றும் வடகிழக்கு டெல்லியில் செயல்பட்டு வந்த ராஜா மேவாதி (எ) 'அக்கி டான்' தலைமையிலான கோஷ்டியுடன் மோதலில் ஈடுபட்டிருந்தது. சூதாட்டம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் தொடர்பாக இரு கும்பலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு என்று போலீஸார் தெரிவித்தனர்.

வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டில் சிக்கிய 37 பேர்

நாடு முழுவதும் சட்டவிரோதமாக கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பீகார் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து விசாரணை நடத்தியதில் நாட்டின் பல்வேறு பகுதியில் இது போன்ற சூதாட்டம் வாட்ஸ் ஆப் மூலம் நடப்ப... மேலும் பார்க்க

"இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பில்லை" – தனிஷிக் நகைக்கடை திருட்டில் கைதான நிஷாந்த்

மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.காவல்துறை தரப்பில் நிஷாந்தை ஐந்து ந... மேலும் பார்க்க

கல்லூரிக்குச் சென்ற மாணவியை தடுத்து ஊர் சுற்றிய வாலிபர் - போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி வ... மேலும் பார்க்க

இரண்டாவதும் பெண் குழந்தை... பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் - தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

ராமேஸ்வரம், சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி (30) இவருக்கும், லோகநந்தினி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலை... மேலும் பார்க்க

அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ம... மேலும் பார்க்க

`கொலையான ஆசிரியை குடும்பத்திற்கு இழப்பீடு என்னாச்சு?'- எஸ்.பிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றியவர் ரமணி. இவரை காதலித்து வந்த மதன்குமார் என்பவர் ரமணி திருமணத்திற்கு மறுத்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.20ம்... மேலும் பார்க்க