வட இந்தியா முழுவதும் வாட்ஸ்ஆப் மூலம் ரூ.88 கோடிக்கு கிரிக்கெட் சூதாட்டம்: ரெய்டி...
Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!
பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்கள், பொது நிகழ்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளைச் சமூக வலைதளவாசிகள் தொடர்ந்து நுணுக்கமாக ஆராய்ந்து பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சில நேரங்களில் ரன்பீர் கபூருக்கு ஆலியா பட் சரியான பொருத்தமில்லை, ரன்பீர் ஆணாதிக்கம் கொண்டவர் என்றெல்லாம் விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், தனது கணவரும் நடிகருமான ரன்பீர் கபூருடனான தனது திருமண வாழ்க்கையை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 'டைம்' இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், `` பெண்கள் தங்கள் மனதையும், விருப்பத்தையும் அறிந்து செயல்பட வேண்டும் என்று எப்போதும் குரல் கொடுப்பவள் நான். அப்படிப்பட்ட என்னை, ஏதோ ஒரு கற்பனையான சூழலில் சிக்கித் தவிப்பவளைப் போலச் சுருக்கிப் பார்ப்பது மிகவும் அவமரியாதையானது.
வழக்கமான திருமண வாழ்க்கை குறித்த பிம்பங்களுக்குள் தங்கள் உறவு பொருந்திப் போகாததால், மற்றவர்களுக்குத் தங்கள் உறவைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். ரன்பீருடனான எனது பிணைப்பு எப்படியென்றால், எந்தவொரு முயற்சியும் இல்லாமலேயே நாம் புரிந்துகொள்ளப்படுவதும், எதுவும் பேசாமலேயே நம் உணர்வுகள் கேட்கப்படுவதும்தான் ஒரு ஆழமான உணர்வின் அடித்தளம். எனக்கும் ரன்பீருக்குமான உறவு அப்படித்தான். அதுதான் எங்களின் உண்மையான வாழ்க்கை" என்றார்.
தற்போது இந்தத் தம்பதியினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட படைப்பான 'லவ் & வார்' (Love & War) திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். 'பிரம்மாஸ்திரா' படத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இதுவாகும். விக்கி கௌஷலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
















