செய்திகள் :

மதுரையில் ரூ.2.32 கோடி அளவிற்கு கல்குவாரி முறைகேடு: முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை

post image

மதுரை பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் கிரஷர் மற்றும் செம்மண் மற்றும் கல் குவாரிகளில் விதிகளை மீறி அதிகளவிற்கு செம்மண் மற்றும் கல் வெட்டி எடுத்ததாக மாவட்ட  குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

சட்டவிரோதமாக கனிம வளங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி எடுத்ததாக கனிமவளத்துறை ஆய்வின் அடிப்படையில் கோட்டாட்சியர், வாடிப்பட்டி வட்டம், சத்திரவெள்ளாளப்பட்டியில் குவாரி குத்தகைதாரர் ஒருவர், அனுமதி பெறாத நிலத்திலிருந்து சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக சரளைக் கற்களை வெட்டி எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அரசுக்கு முறையே ₹2.32 கோடி மற்றும் ₹3.07 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை அளித்துள்ளார்.

இந்த புகார்களின் அடிப்படையில், மதுரை மாவட்ட மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் இரு வழக்குகள் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான  மதுரை  அய்யர் பங்களா, எழில் நகர், ரோஜா வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சட்டவிரோத குவாரி தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பொருட்கள் உள்ளதா என்பது குறித்து முதலாவது நீதித்துறை நடுவர் தகவல் அளிக்கப்பட்டு தற்போது மதுரை மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்

சோதனை நடைபெற்று வரும் முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுகவினர் அவருடைய வீட்டின் முன்பு கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மௌனம் காத்தது மனித உரிமை மீறல்" - டாக்டர் கிருஷ்ணசாமி கூறுவது என்ன?

"ஒரு மக்கள் பிரதிநிதியின் உடல்நிலை குறித்து மூன்று மாதங்கள் மருத்துவமனையும், அரசும் மௌனம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை" என்று கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கான இரங்கல் செய்தியில... மேலும் பார்க்க

```Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேர... மேலும் பார்க்க

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா?

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான 'தமிழ்நாடு வழிகாட்டி' (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 உயர் அதிகாரிகள், ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் அதிரடியாக... மேலும் பார்க்க

"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். இவரது சகோதரர் கே.முரளீதரன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். பத்மஜா வேணுகோபால் முன்பு கா... மேலும் பார்க்க

தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் - பின்னணி?

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற... மேலும் பார்க்க

வி.எஸ் பாபு மறைவு: `எடப்பாடி முதல் அண்ணாமலை வரை' - அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.... மேலும் பார்க்க