செய்திகள் :

"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

post image

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். இவரது சகோதரர் கே.முரளீதரன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். பத்மஜா வேணுகோபால் முன்பு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தார். 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திருச்சூர் தொகுதியிலும், 2004 மக்களவைத் தேர்தலில் முகுந்தபுரம் தொகுதியிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அவர் தோல்வியடைந்தார். கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க-வில் இணைந்தார். டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அக்கட்சியின் உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸில் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பா.ஜ.க-வில் இணைந்த பத்மஜாவுக்கு, அங்கும் எதிர்பார்த்த அளவிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பப் போவதாகக் கடந்த சில நாட்களாகவே கேரள அரசியலில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் தற்போது பா.ஜ.க-வில் இருந்து விலகியுள்ளார் பத்மஜா வேணுகோபால்.

பாஜக
பாஜக

பா ஜ.க-வில் இருந்து பத்மஜா வேணுகோபால் விலகியதற்கான ராஜினாமா கடிதத்தைக் கட்சித் தலைமையிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் பா.ஜ.க-வில் இணைந்தது தவறான முடிவு என்றும், தற்போது அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதாகவும் பத்மஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-விலிருந்து விலகிய பத்மஜா வேனுகோபால்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மஜா வேணுகோபால் மேலும் கூறுகையில், "நான் பா.ஜ.க-விலிருந்து விலகுவது குறித்து அண்ணன் கே.முரளீதரனிடம் கூறியபோது, 'உன் மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் உகந்ததை நீ செய்' என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைவது குறித்து நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. பா.ஜ.க-வில் இருந்து ஏன் விலகினீர்கள் எனக் கேட்கிறீர்கள். காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் பா.ஜ.க-வில் தொடர முடியாது. அதிலும் மூத்த காங்கிரஸ் தலைவரான கே.கருணாகரனின் மகளான நான் சிறு வயதிலேயே ரகுபதி ராகவ ராஜா ராம் என பாடி வளர்ந்தேன். அப்படிப்பட்ட எனக்கு பா.ஜ.க ஒத்துப்போகவில்லை" என்றார்.

தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் - பின்னணி?

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற... மேலும் பார்க்க

வி.எஸ் பாபு மறைவு: `எடப்பாடி முதல் அண்ணாமலை வரை' - அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.... மேலும் பார்க்க

`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழிசை

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்திருக்கும் புகார், தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது சட்டரீத... மேலும் பார்க்க

'விஜய்க்கு பிடித்தமானவர்; நிறைவேறாத மினிஸ்டர் ஆசை!' - வி.எஸ்.பாபுவின் தவெக கதை!

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகியிருக்கிறார். தவெகவில் கடந்த பிப்ரவரி மாதம்தான் இணைந்திருந்தார். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம் இப்போதைய முதல்வர் விஜய்க்கும் தவெக தொண்டர்... மேலும் பார்க்க

'வருத்தமளிக்கிறது.!'- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபுவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

``மக்களோடு மக்களாகப் பழகி, அன்பை பெற்றவர்" - வி.எஸ் பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.... மேலும் பார்க்க