செய்திகள் :

'விஜய்க்கு பிடித்தமானவர்; நிறைவேறாத மினிஸ்டர் ஆசை!' - வி.எஸ்.பாபுவின் தவெக கதை!

post image

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகியிருக்கிறார். தவெகவில் கடந்த பிப்ரவரி மாதம்தான் இணைந்திருந்தார். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம் இப்போதைய முதல்வர் விஜய்க்கும் தவெக தொண்டர்களுக்கும் மனதுக்கு நெருக்கமானவராக மாறியிருந்தார். பெரு வெற்றியை பெற்றியிருந்தாலும் ஒரு நிறைவேறாத ஆசையுடன் அவர் காலமாகியிருப்பதாக கட்சியினர் பகிர்ந்துகொள்கின்றனர்.

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு

2006 இல் திமுக சார்பில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முதலாக எம்.எல்.ஏ ஆகியிருந்தார். பின்னர் 2011 ஆம் ஆண்டு திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்ட போது, அவருக்கு மும்மரமாக தேர்தல் வேலையும் செய்திருக்கிறார்.

இந்த சமயத்தில்தான் சேகர்பாபுவும் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். சேகர்பாபுவுடனான வட சென்னை பாலிட்டிக்ஸில் தான் ஓரங்கட்டப்படுவதை அறிந்த பாபு, திமுகவிலிருந்து விலகி அதிமுகவுக்கு வந்தார். அங்கேயும் அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை. அதிருப்தியில் ஒதுங்கியிருந்த பாபுவை தவெக முகாமுக்கு வருமாறு ஆதவ் அர்ஜூனாவின் டீம் தூதுவிட்டது. இதில் தவெகவுக்கும் ஒரு கணக்கு இருந்தது.

வி.எஸ்.பாபு

முதல்வர் விஜய் உட்பட தவெகவின் முக்கியஸ்தர்கள் பலரும் வட சென்னை தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருந்தனர். அதனால் வடசென்னையை நன்கறிந்த முகமாக இருந்த வி.எஸ்.பாபு தங்களுக்கு உதவுவார் என தவெக முகாம் நம்பியது. ஆனால், வி.எஸ்.பாபு சீட்டும் எதிர்பார்த்தார். அதற்கும் உறுதி கொடுத்து ஆதவ் டீம் பாபுவை விஜய்யிடம் அழைத்துச் சென்றது. சீனியர் என்றதால் விஜய் முதல் சந்திப்பிலேயே பாபுவிடம் மிகவும் பணிவாக பண்பாக பேசியிருக்கிறார். இதில் வி.எஸ்.பாபு நெகிழ்ந்துவிட்டார். கட்சியில் இணைந்த ரெண்டே வாரத்தில், ’ஸ்டாலின் யாருன்னு எனக்கு தெரியும். நான் யாருன்னு ஸ்டாலினுக்கு தெரியும். நான் பேசினா வேற மாதிரி ஆகிடும். இந்தத் தொகுதியோட 10 தெரு பேரை ஸ்டாலினால சொல்ல முடியுமா? எனக்கு இங்க ஒவ்வொரு சந்தும் தெரியும். நாமதான் கோட்டையை பிடிக்குறோம். குறிப்பா, வடசென்னையில 8 தொகுதியையும் நான் அடிச்சு கொடுக்குறேன்' என பொதுக்கூட்டத்தில் ஒரே போடாக போட்டார் வி.எஸ்.பாபு.

ஸ்டாலினுக்கு எதிராக கொஞ்சம் அனுபவமான ஆளை நிறுத்த வேண்டுமென்பதால், ஏற்கனவே தொகுதியை குறிவைத்து வேலை செய்த தொழிலதிபர் ஒருவரை ஒதுக்கிவிட்டு பாபுவுக்கு சீட் கொடுத்தனர். விஜய்யும் பெரம்பூரில் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு அவர் தொகுதியில் பேசி முடித்து அடுத்ததாக கொளத்தூரூக்குதான் சென்றார். சென்னையில் விஜய்க்கு அதிகப்படியான கூட்டம் கொளத்தூரில்தான் கூடியிருந்தது. கூட்டம் அதிகம் என்பதால் அங்கே பாபுவுக்காக விஜய்யால் மூன்று நிமிடம் மட்டுமே பேச முடிந்தது. விஜய் இன்னொரு நாள் பிரசாரத்துக்கு வருவார் என பாபு எதிர்பார்த்திருந்தார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே விஜய்யை போன்றே ஒரு டூப் வைத்துக் கொண்டு தொகுதியை சுற்றி வந்தார் பாபு.

விஜய் - வி.எஸ்.பாபு

வி.எஸ்.பாபு தடாலடியாகவும் வேடிக்கையாகவும் பேசக்கூடியவர். வில்லிவாக்கத்தில் ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது தவெக தலைவர்கள் இருந்த மேடையை நோக்கி பாட்டில் வீசப்பட்டது. உடனே வேட்டியை மடித்துக் கொண்டு இறங்கிய பாபு, 'பாட்டில் வீசுனவன் சரியான ஆளா இருந்தா வெளியே வாங்கடா...' என இறங்கவே ஆதவ் உட்பட தவெக தலைவர்கள் அத்தனை பேரும் மிரண்டு விட்டனர். வாக்கு எண்ணப்படுவதற்கு முன்பு பனையூரில் நடந்த கூட்டத்திலும், 'தளபதி நீங்க ஜெயிக்கிறீங்க. ஸ்டாலினும் தோற்குறாரு. திமுகவும் தோற்குது' என விஜய்யிடம் அத்தனை நம்பிக்கையாக அசட்டு தொனியில் கூறியிருக்கிறார். அதிலேயே விஜய் இம்பிரஸ் ஆகிவிட்டார். வெளியே வந்தவர் முதல் முறையாக ஸ்டாலின் செய்த அந்த கை சைகையை ஊடகங்கள் முன்பு செய்து தம்ப்ஸ் அப் காட்டினார். அதன்பிறகு எந்த இடத்தில் அவரை பார்த்தாலும் அந்த சைகையை தவெக தொண்டர்கள் செய்ய ஆரம்பித்தனர். வி.எஸ்.பாபுவின் ஜாலியான சைகை பிடித்துப் போன விஜய் சட்டமன்றத்திலேயே அந்த சைகையை செய்திருப்பார்.

ஸ்டாலினையே தோற்கடித்ததால் தனக்கு கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் பெரிய கௌரவம் கிடைக்கும் என பாபு எதிர்பார்த்தார். விஜய்யும் வி.எஸ்.பாபுவிடம், 'சொன்னதை செஞ்சிட்டீங்களே அண்ணே...' என நெகிழ்ந்திருக்கிறார். வெற்றிக்கு பலனாக அமைச்சர் பதவி கிடைத்தால், மீண்டும் வட சென்னையின் முகமாக மாறி நிற்கலாம் எனும் எண்ணமும் இருந்தது. ஆனால், பாபு 75 வயதை கடந்தவர் என்பதால் தவெக தலைமை பாபுவுக்கு பதவி கொடுக்க யோசித்தது. அதிமுகவிலிருந்து வந்த சீனியர்களான செங்கோட்டையன், ஜே.சி.டி போன்றோருக்கு கௌரவமான பதவிகள் கொடுத்துவிட்டு தன்னை கவனிக்காமல் விட்டதில் கொஞ்சம் அப்செட்டாகவும் இருந்தார். 'நம்மல எதாச்சு கவனிப்பாங்களா...அமைச்சர் இல்லன்னாலும் கட்சியில எதாச்சு ரெஸ்பெக்ட்டான போஸ்டிங் கொடுப்பாங்களா?' என தனக்கு நெருக்கமான சிலரிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டும் இருந்தார் என்கின்றனர்.

தவெகவின் வெற்றியில் கவனிக்கத்தக்க முகமாக இருந்தவர் வி.எஸ்.பாபு. அவரை இழந்திருப்பதில் முதல்வர் உட்பட அத்தனை பேருமே சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழிசை

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்திருக்கும் புகார், தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது சட்டரீத... மேலும் பார்க்க

'வருத்தமளிக்கிறது.!'- கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபுவுக்கு இரங்கல் தெரிவித்த ஸ்டாலின்

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

``மக்களோடு மக்களாகப் பழகி, அன்பை பெற்றவர்" - வி.எஸ் பாபு மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.... மேலும் பார்க்க

'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'- ஆதவ் அர்ஜுனா

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

முன்னேற்றம்... பின்னடைவு... இறுதியில் மாரடைப்பு - வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள்

72 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை முன்னேற்றம... மேலும் பார்க்க

'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' - விவரம் என்ன?

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். வி.எஸ்.பாபுகடந்த செப்டம்பர் 9 ஆ... மேலும் பார்க்க