செய்திகள் :

விசேஷங்களில் தங்க நகை Gift வருதா? ஆல்பமும், மொய் புக்கும் ரெடியாக வைத்துக்கொள்ளுங்க!

post image

நம் இந்தியக் குடும்பங்களில் ‘ஒரு குண்டுமணி தங்கமாவது’ கண்டிப்பாக இருக்கும். இதில் பலரின் வீட்டில் பவுன் கணக்கில் தங்க நகைகள் இருக்கும். இன்னும் சிலர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கமும், தங்க நகைகளும் இருக்கும்.

ஆனால், இந்தியாவில் ஒரு வீட்டில் எவ்வளவு தங்கம், தங்க நகைகள் இருக்கலாம் என்பதை ஆடிட்டர் கிரி பாபு விளக்குகிறார்.
ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

“ஒரு வீட்டில் இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று சட்டப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

வருமான வரித்துறை சோதனை நடத்தும்போது, கணக்கில் காட்டப்படாத சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான வரம்பாகத்தான் சில அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணமான பெண் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும், ஒரு ஆண் 100 கிராம் வரையிலும் நகைகள் வைத்திருக்கலாம்.

அதாவது, ஒரு வீட்டில் இவர்கள் மூவரும் இருந்தால், சுமார் 850 கிராம் வரை எந்தக் கேள்வியும் இன்றி வைத்திருக்க முடியும்.

ஆதாரம் தான் முக்கியம்

ஆனால், இது சோதனையின்போது பின்பற்றப்படும் ஒரு நடைமுறை வரம்பே தவிர, இதுதான் உச்சவரம்பு கிடையாது. உங்களிடம் 2 கிலோ அல்லது 3 கிலோ தங்கம் இருந்தாலும், அதற்கான சரியான ஆதாரம் இருந்தால் தாராளமாக வைத்திருக்கலாம்.

நீங்கள் எவ்வளவு தங்கம் அல்லது ரொக்கப் பணம் வைத்திருக்கிறீர்கள் என்பதை விட, அது எந்த வழியில், எப்போது உங்களுக்குக் கிடைத்தது என்பதற்கான ஆதாரம்தான் முக்கியம்.

உதாரணமாக, திருமணத்தின்போது ஒரு பெண்ணுக்குப் பிறந்த வீட்டிலிருந்து 500 கிராம் நகை போடப்படுகிறது. பின்னர் கணவர் 100 கிராம் வாங்கித் தருகிறார்.

அதன்பின் குழந்தை பிறப்பு, காதுகுத்து போன்ற விசேஷங்களில் 100 கிராம் நகை பரிசாகக் கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது அந்தப் பெண்ணிடம் மொத்தம் 700 கிராம் நகை இருக்கும். இது சட்டப்படி முற்றிலும் செல்லுபடியாகும்.

கூடுதலாகச் சேரும் இந்த நகைகளுக்கு நாம் எவ்வாறு ஆதாரங்களை வைத்திருக்கலாம்?

பரிசளிப்புப் பத்திரம் (Gift Deed): பெற்றோரோ அல்லது கணவரோ அதிக அளவில் (பல்க் ஆக) நகைகளை வாங்கித் தரும்போது, எந்த விசேஷத்திற்காக, எவ்வளவு நகை வழங்கப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு ஒரு ‘கிப்ட் டீட்’ எழுதி வைத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

மொய் நோட்டு மற்றும் புகைப்படங்கள்: விசேஷங்களின்போது உறவினர்கள் 1 கிராம், ஒரு சவரன் எனச் சிறிய அளவில் நகைகளோ அல்லது ரொக்கப் பணமோ கொடுக்கும்போது,

யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதை ‘மொய் நோட்டில்’ எழுதி வைப்பது மிகச்சிறந்த ஆதாரமாகும். மேலும், பரிசு வழங்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்களும் எதிர்காலத்தில் ஆதாரமாகப் பயன்படும்".

'14 மாதங்களில் இல்லாத சரிவு' சென்னையில் ஒரு பவுன் ரூ.95 ஆயிரம்! தங்கம் விலை குறைய காரணங்கள் என்ன?

இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.235-உம், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1,880-உம் குறைந்துள்ளது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.95,840-க்கும் விற்பனை... மேலும் பார்க்க

Gold: ரூ.97,720-க்கு சறுக்கிய தங்கம் விலை; 2027-ம் ஆண்டு விலை என்னவாகும்? - நிபுணர் விளக்கம்

தங்கம் விலை நல்ல இறக்கத்தைக் கண்டு வருகிறது. இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.2,040 குறைந்து ரூ.97,720-க்கு விற்பனையாகி ... மேலும் பார்க்க

Gold: ரூ.1 லட்சத்திற்கு கீழ் இறங்கிய தங்கம் விலை; 'இதற்கும்' கீழிறங்கினால் கிடுகிடு சறுக்கல்!

இன்று சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்குக் கீழ் குறைந்துள்ளது.இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.12,470-க்கும், ஒரு பவுன் தங்கம் விலை ரூ.99,760-க்கும் விற்பனையாகி வருகிறது.... மேலும் பார்க்க

தீபாவளி நேரம்: '5 நாள்களில் ரூ.3,080' ஏறும் தங்கம் விலை! அடுத்து தங்கம் விலை ஏறுமா, குறையுமா? | Gold

கடந்த வாரம் சரியாக இதே நாளில், அதாவது சனிக்கிழமை (அக்டோபர் 31) சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.01 லட்சத்திற்குச் சென்றது. ‘அட... தீபாவளியும் வருது. தங்கம் விலையுமே குறையுதே’ என்ற மகிழ்ச்சி, திங்... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலையின் ரூட்டை மாற்றிய ட்ரம்ப் கட்சியின் தோல்வி; இந்த ஏற்றம் தொடருமா?

கடந்த வாரம், சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1.01 லட்சம் என்று இறங்கியது. ஆனால், அன்றிலிருந்து சரியாக 5 நாட்களில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-உம், பவுனுக்கு ரூ.5,240-உம் உயர்ந்துள்ளது. இன்... மேலும் பார்க்க

Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது.இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராம... மேலும் பார்க்க