செய்திகள் :

தீபாவளி நேரம்: '5 நாள்களில் ரூ.3,080' ஏறும் தங்கம் விலை! அடுத்து தங்கம் விலை ஏறுமா, குறையுமா? | Gold

post image

கடந்த வாரம் சரியாக இதே நாளில், அதாவது சனிக்கிழமை (அக்டோபர் 31) சென்னையில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.01 லட்சத்திற்குச் சென்றது.

‘அட... தீபாவளியும் வருது. தங்கம் விலையுமே குறையுதே’ என்ற மகிழ்ச்சி, திங்கட்கிழமையே (நவம்பர் 2) பறந்துவிட்டது. கடந்த ஐந்து நாள்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.385-உம், பவுனுக்கு ரூ.3,080-உம் ஏறிவிட்டது.

ஏறுமுகத்திற்கு என்ன காரணம்?

இன்று சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.13,160-க்கும், பவுனுக்கு ரூ.1,05,280-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த ஏற்றத்திற்கு மிக முக்கியக் காரணம் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தத் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், ஈரான் போரில் இதுவரை ட்ரம்பிற்கு இருந்த வலுவான அதிகாரம் சற்று குறைந்துள்ளது.

ஜனநாயகக் கட்சி ஆரம்பத்திலிருந்தே ஈரான் போருக்கு எதிராக உள்ளது. இப்போது அந்தக் கட்சிதான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இதனால், ஈரான் போரைத் தொடருவதில் ட்ரம்பிற்கு நாடாளுமன்றத்தில் சிக்கல் ஏற்படலாம். ஆனால், அவருக்கு வீட்டோ அதிகாரம் உண்டுதான்.

அடுத்து என்ன?

இருந்தாலும், ஏற்கெனவே ஈரான் போரில்தான் ட்ரம்பின் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால், வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஈரான் போரைத் தொடர்வதில் ட்ரம்ப் ஆர்வம் காட்டமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. இதன் தாக்கமாக, இன்னொரு பக்கம், தங்கம் விலை ஏறி வருகிறது.

தங்கம்
தங்கம்

அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் வெளியானது, கடந்த 5-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.07 லட்சத்தைத் தாண்டியது. அதன்பிறகு, இப்போது குறைந்து ரூ.1.05 லட்சத்திற்கு வர்த்தகமாகி வருகிறது. இதனால், இதுவே நல்ல இறக்கம் என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஈரான் போர் மீண்டும் தொடராமல் இருந்தால், தங்கம் விலை ஏறுமுகத்தைக் காணும். இல்லையென்றால், தங்கம் விலை மீண்டும் சரியத் தொடங்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

Gold Rate: தங்கம் விலையின் ரூட்டை மாற்றிய ட்ரம்ப் கட்சியின் தோல்வி; இந்த ஏற்றம் தொடருமா?

கடந்த வாரம், சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1.01 லட்சம் என்று இறங்கியது. ஆனால், அன்றிலிருந்து சரியாக 5 நாட்களில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-உம், பவுனுக்கு ரூ.5,240-உம் உயர்ந்துள்ளது. இன்... மேலும் பார்க்க

Gold: தீபாவளி தமாக்கா! பவுனுக்கு ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை; சறுக்கலுக்கு காரணம் என்ன?

தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரம்தான் உள்ளது.இந்த நேரத்தில் நம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்.இன்று சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.310-உம், பவுனுக்கு ரூ.2,480-உம் குறைந்துள்ளது. வெள்ளி கிராம... மேலும் பார்க்க

Gold Rate: தீபாவளி நெருங்குகிறது! தங்கம் விலை அடுத்தடுத்து ஏறுமா, இறங்குமா?

கிட்டத்தட்ட 10 நாள்களில் தீபாவளி பண்டிகை.இந்த நேரத்தில் தங்கம் விலை எப்படி இருக்கிறது... தீபாவளி நெருங்குகையில் தங்கம் விலை எப்படி இருக்கலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.விலை... கடந்த வாரம் தங்கம் விலை ம... மேலும் பார்க்க

Gold: பண்டிகை சீசன் நெருங்குது! தங்க முதலீட்டிற்கு செபி போடும் பிரேக்; எந்த SIPகளுக்குத் தடை?

தங்க இ.டி.எஃப்களில் முதலீடு செய்யும் ‘கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ்’ (FoFs) திட்டங்களில் புதிய முதலீடுகளுக்குப் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.கோல்டு ஃபண்ட்-ஆஃப்-ஃபண்ட்ஸ் ... மேலும் பார்க்க

Gold: சென்ற ஆண்டு மாதிரி ஃபீல் பண்ணாமல், இந்த ஆண்டு புத்திசாலித்தனமா தொடங்குங்க!

இப்போது நவராத்திரி சீசனில் இருக்கிறோம். இனி தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என ஜனவரி வரை அடுத்தடுத்துப் பண்டிகைகள்தான். இடையில் பல முகூர்த்த நாள்கள் இருப்பதும் மறப்பதற்கில்லை.இந்திய மக்களுக்... மேலும் பார்க்க