செய்திகள் :

முன்னேற்றம்... பின்னடைவு... இறுதியில் மாரடைப்பு - வி.எஸ்.பாபுவின் கடைசி 72 நாட்கள்

post image

72 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை முன்னேற்றம்...பின்னடைவு என மாறி மாறி போக்குக் காட்டி இறுதியில் உயிர் பிரிந்திருக்கிறது.

வி.எஸ்.பாபுவுக்கு என்ன ஆனது?

ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் முழுவதிலுமே வி.எஸ்.பாபு கலந்து கொண்டார். சட்டமன்றத்துக்கு வருகையிலும் அவையை முடித்துவிட்டு கிளம்புகையிலும் அவரின் ட்ரேட்மார்க் கை சைகையை செய்தும் மீசையை முறுக்கி போஸ் கொடுத்துவிட்டும் செல்வார். இந்நிலையில், கூட்டத்தொடர் முடிந்த மறுநாளான செப்டம்பர் 9 ஆம் தேதியே வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வி.எஸ்.பாபு
வி.எஸ்.பாபு

சளித்தொல்லை மற்றும் மூச்சுத்திணறலால் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஒரு சில நாட்கள் கழித்து அவருக்கு சுவாசக்கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வந்த முதல்வர் விஜய் செப்டம்பர் 23 ஆம் தேதி வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வி.எஸ்.பாபுவை முதல்வர் நேரில் பார்த்து ஆறுதல் கூறி, 'சீக்கிரம் மீண்டு வாங்க' என உத்வேகம் கொடுத்திருந்தார். செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனை தரப்பில் கடைசியாக அறிக்கை வெளியாகியிருந்தது. அதில் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதன்பிறகு அவரின் உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. 'அப்பாவின் உடல்நிலை குறித்து பொதுவெளியில் தெரிவிக்க வேண்டாம்' என வி.எஸ்.பாபுவின் மகன்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டதாக தகவல்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் சில சமயங்களில் அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்தை காட்டியிருக்கிறது. 'அவருக்கு ஒண்ணும் இல்ல உற்சாகமா இருக்கார். பொழுது போறதுக்காக படம் பார்க்குற அளவுக்கு தேறிட்டாரு' என அவரது குடும்பத்தினர் கட்சியினருக்கு தகவல் சொல்லியிருக்கின்றனர். அமைச்சர்கள் அருண்ராஜும் மரிய வில்சனும் இடையிடையே அவரைப் போய் சந்தித்து வந்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகரும் இடையில் இரண்டு முறை அவரிடம் போனில் பேசி நலம் விசாரித்திருக்கிறார். போனில் பேசுமளவுக்கு முன்னேற்றம் அடைந்ததால் அவர் எப்படியும் மீண்டு வந்துவிடுவார் என்றே தவெகவினர் நினைத்தனர்.

VS Babu
வி.எஸ்.பாபு - VS Babu

ஆனால், மீண்டும் அவரின் உடல்நிலை பின்னடைவை எட்டவே வெண்டிலேட்டர் உதவியுடன் உயிரை காக்க மருத்துவர்கள் போராடியிருக்கின்றனர். உயர் ரக அதி தீவிர சிகிச்சைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வரும் அவ்வபோது பாபுவின் உடல்நிலை குறித்து கேட்டு தெரிந்துகொண்டே இருந்திருக்கிறார். வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கும் போதே மாரடைப்பும் ஏற்பட்டதால் அவரின் உயிர் பிரிந்திருக்கிறது.

தீவிர சிகிச்சையில் இருந்திருந்தாலும் நம்பிக்கையளிக்கும் முன்னேற்றத்தை காட்டிவிட்டு அவரது உயிர் பிரிந்திருப்பதில் முதல்வர் உட்பட வி.எஸ்.பாபுவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் பலரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.

'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'- ஆதவ் அர்ஜுனா

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்... மேலும் பார்க்க

'72 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் காலமானார் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!' - விவரம் என்ன?

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். வி.எஸ்.பாபுகடந்த செப்டம்பர் 9 ஆ... மேலும் பார்க்க

வி.எஸ் பாபுவுக்கு தீவிர சிகிச்சை; மருத்துவமனை வந்த ஆதவ் அர்ஜுனா - போலீஸ் குவிப்பு!

கடந்த செப்.9 ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக தவெக கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ் பாபு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். 70 நாட்களுக்கு மேலாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

``நாங்க சலுகைகள் தருகிறோம்; வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த நிறுவனங்கள் என்ன செய்தன?" - பிரதமர் மோடி

டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த... மேலும் பார்க்க

``ரூ700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: எப்போதுதான் முதல்வர் பேசுவார்?" - ஸ்டாலின் விமர்சனம்

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேர... மேலும் பார்க்க

டாஸ்மாக் கிடங்கு: 'மருத்துவத்துறை நிதி பயன்படுத்தப்படவில்லை.!'- மக்கள் நல்வாழ்வுத்துறை விளக்கம்

"டாஸ்மாக் கிடங்குகளைப் பராமரிக்க மருத்துவத்துறையின் நிதியைத் தமிழ்நாடு அரசு பயன்படுத்துவதாகவும், மருத்துவப் பணிகள் கழகம் தனது கடமையை மறந்து டாஸ்மாக் பணிகளில் ஈடுபடுவதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு... மேலும் பார்க்க