'சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர்; அவருக்காகத் தான் தலைவர் விஜய் கொளத்தூரில்.!'-...
``நாங்க சலுகைகள் தருகிறோம்; வேலைவாய்ப்பு, ஊதியத்தை உயர்த்த நிறுவனங்கள் என்ன செய்தன?" - பிரதமர் மோடி
டெல்லியில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) ஆண்டு பொதுக்குழு மற்றும் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்திய வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காகக் கார்ப்பரேட் வரி விகிதங்களைக் குறைத்தல், வருமான வரிச் சலுகைகள், விதிமுறைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
இருப்பினும், இந்தச் சலுகைகளைப் பயன்படுத்தித் தொழில்துறை என்ன சாதித்துள்ளது என்பதை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. நாட்டின் வளர்ச்சியை அரசு மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் என நிறுவனங்கள் எதிர்பார்க்கக் கூடாது.

நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வருமானத்தை உயர்த்தியுள்ளனவா, வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளனவா? என்ற கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. மேலும், வாய்ப்புகளை அரசே அடையாளம் காட்டும் என்று காத்திருக்காமல், இந்தியாவின் விரிவடைந்து வரும் வர்த்தக ஒப்பந்தங்களைப் (FTA) பயன்படுத்திக்கொள்ளத் தொழில்துறையினர் உறுதியான வியூகங்களை வகுக்க வேண்டும். இந்தியாவின் உள்நாட்டு நுகர்வோர் சந்தை என்பது நிறுவனங்களின் சொகுசு மண்டலமாக மாறிவிடக் கூடாது. வெளிநாட்டுச் சந்தைகளுக்கு வழங்கப்படும் அதே தரத்திலான பொருட்கள் இந்திய நுகர்வோருக்கும் கிடைக்க வேண்டும்.
இந்தியா இன்னும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் துறைகளில், உற்பத்தித் திறனை அதிகரிக்க முதலீடு செய்ய வேண்டும். இந்தியா மிகப்பெரிய விவசாய உற்பத்தித் தளத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய வேளாண் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2 முதல் 2.5 சதவீதமாகவே உள்ளது. எனவே, உள்நாட்டு சந்தையில் மட்டுமே கவனம் செலுத்தாமல், வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் வணிகர்கள் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த அக்டோபர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட 45.1 சதவீதம் அதிகரித்து, 49.47 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இருப்பினும், உடனடி லாபம் தரும் துறைகளை மட்டுமே பாரம்பரிய நிறுவனங்கள் நம்பியிருக்கக் கூடாது. 'வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கும் நிலையில், அடுத்த இருபது ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய தேவைகளில் ஏற்படும் மாற்றங்களை நிறுவனங்கள் முன்கூட்டியே கணிக்க வேண்டும்." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














