செய்திகள் :

பாலிவுட்டின் கிங் கான் `எக்காலத்திலும் சிறந்த சினிமா நட்சத்திரம்' பட்டியலில் இடம்பிடித்த ஷாருக் கான்

post image

இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமான நடிகர்களில் முதலிடத்தில் இருப்பது ஷாருக் கான் என்பதில் சந்தேகமே இல்லை. அவருக்கு சர்வதேச அளவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது திரைப்படங்கள் மூலம் வெளிநாடுகளிலும் முத்திரை பதித்துள்ள ஷாருக் கான், தற்போது 'எக்காலத்திற்குமான மிகச்சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்கள்' பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 'வெரைட்டி' என்ற ஆன்லைன் இதழ், எல்லா காலத்திலும் சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய நடிகர் 'பாலிவுட் கிங் என்று அழைக்கப்படும் நட்சத்திரம் ஷாருக் கான் மட்டுமே. அவர் இந்தப் பட்டியலில் 92-வது இடத்தில் இடம் பெற்றுள்ளார். ஷாருக் கானை பற்றி ​​அந்த சர்வதேச இணையதளம் குறிப்பிட்டுள்ள பதிவில், அவரை பாலிவுட் சினிமா ஜாம்பவான் என்று குறிப்பிட்டுள்ளது.

.

பாஸிகர் மற்றும் தார் ஆகிய படங்கள் அவருக்கு திருப்புமுனைப் படங்களாக அமைந்தன என்று அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்ததுடன், தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே மற்றும் தேவதாஸ் போன்ற படங்கள் அவரை காதல் நாயகன் அந்தஸ்துக்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டு இருந்தது. மேலும், இந்தியாவில் உள்ள அவரது ரசிகர்கள் ஷாருக் கானை 'கிங் கான்' என்று அழைப்பதாகவும், அவர் தனது சிம்மாசனத்தில் சௌகரியமாக அமர்ந்திருப்பதாகவும் அந்த இணையதளம் குறிப்பிட்டிருந்தது.

எல்லா காலத்திலும் மிகச்சிறந்த 100 திரைப்பட நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 10 நட்சத்திரங்கள்: மெர்லின் மன்ரோ, ஹம்ப்ரி போகார்ட், சார்லி சாப்ளின், ஜாக் நிக்கல்சன், கேத்தரின் ஹெப்பர்ன், சிட்னி பொயட்டியர், மார்லன் பிராண்டோ, டாம் குரூஸ், தோஷிரோ மிஃபுனே மற்றும் பார்பரா ஸ்ட்ரைசண்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மூடிய வந்தே பாரத் ரயிலின் தானியங்கி கதவுகள் - `BYE' சொல்லப் போய் ₹36,000 ஃபைன் கட்டிய கதை!

உத்தரப்பிரதேசத்தில் உறவினர்களை ரயிலில் ஏற்றி வழியனுப்பச் சென்ற 12 பேர், வந்தே பாரத் ரயிலில் சுமார் 140 கி.மீ பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், ₹36,000 அபராதமும் செலுத்தியுள்ளனர்.வாரணாசி – புதுடெல... மேலும் பார்க்க

பிரார்த்தனை கூடமா, மசூதியா? - தாவூத் குடும்பம் வசித்த கட்டடத்தை அடியோடு இடிக்கும் மும்பை மாநகராட்சி

மும்பையில் கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்து வந்த தாவூத் இப்ராகிம் 1986ம் ஆண்டு மும்பையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றான். மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு தாவூத் இப்ராகிம் ... மேலும் பார்க்க

`ரூ.15 கோடி தொழில் வேண்டாம்' - மனைவி, மகள்களுடன் ஜெயின் மத துறவியாகும் சூரத் தொழிலதிபர்

ஜெயின் மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தொழிலதிபர்கள் திடீரென ஜெயின் மத சன்னியாசிகளாக மாறிவிடுவதுண்டு. சில நேரங்களில் சிறுமிகள் கூட ஜெயின் மத துறவியாகிவிடுவதுண்டு. புதிதாக சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ... மேலும் பார்க்க

15 ஆண்டுக்கால காத்திருப்பு... ஒரே லாட்டரியில் ரூ.12 கோடி - பஞ்சாப் விவசாயிக்கு அடித்த ஜாக்பாட்!

தினமும் உழைப்பு... விவசாயம்... அவ்வப்போது ஒரு லாட்டரி சீட்டு என வாழ்க்கையை நகர்த்திவந்த விவசாயிக்கு, ஒரே நாளில் ரூ.12 கோடி பரிசு கிடைத்திருக்கிறது. 15 ஆண்டுகளாக லாட்டரி வாங்கிவந்த அவரது காத்திருப்புக்... மேலும் பார்க்க

மும்பை: மனைவியை அமர வைத்து எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டிய பிரிட்டன் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டனுடன் மும்பை வந்துள்ளார். இளவரசர் வில்லியம், வருடாந்திர சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தன் மனைவியுடன் நேற்று மும்பை வந்தார். ந... மேலும் பார்க்க