செய்திகள் :

"என் மூத்த மகள் விரும்பினால் அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார்" - நடிகர் அர்ஜுன் விளக்கம்

post image

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்துகொள்ளாதது பேசுபொருளான நிலையில் தற்போது அதுகுறித்து அர்ஜுன் விளக்கம் அளித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "முதலில், அன்ஜனாவின் திருமணத்தை முன்னிட்டு அவருக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் தங்களது அன்பையும், மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பும் நல்வாழ்த்துகளும் எங்களுக்கு எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. எங்களை நினைத்து வாழ்த்திய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுனின் இளைய மகள் திருமணம்
அர்ஜுனின் இளைய மகள் திருமணம்

ஆனால், இதுபோன்ற ஒரு விஷயத்தை பொதுவெளியில் பேச வேண்டிய சூழல் ஏற்படும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அது குறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவிப்பார். ஆனால், ஒரு தந்தையாக, எனது மகளையும், அவரது குணத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற மற்றும் மிகவும் இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியாது.

நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, யூகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், யூகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளைப் புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமை அளிப்பதல்ல.

அர்ஜுன்
அர்ஜுன்

எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும். அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், எங்களது மௌனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது.

அதேபோல், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும், பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடமளிக்காது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் காரணம் என்ன?

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

"'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன; அவைதாம் அந்தப் படத்தின் வெற்றி"- கீர்த்தி சுரேஷ்

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் சில திரையரங்கங்களில் தனுஷின் 'O.M' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் - என்ன பிரச்னை?

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. சந்தனக் கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்த... மேலும் பார்க்க

OM: ``முதல்வர் விஜய்க்கு நன்றி; ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" - நடிகர் தனுஷ்

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கு முன்பு அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்ற... மேலும் பார்க்க

Aakasamlo Oka Tara: "சினிமாவுக்கு வரலன்னா கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன்"- ஜி.வி பிரகாஷ்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ச... மேலும் பார்க்க