செய்திகள் :

OM: ``முதல்வர் விஜய்க்கு நன்றி; ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" - நடிகர் தனுஷ்

post image

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கு முன்பு அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்றும் 6 மணிக் காட்சி வரையறுக்கப்பட்டது. ஆனால் 2023ம் ஆண்டு துணிவு - வாரிசு ஆகிய படங்களின் வெளியீட்டின் போது ஒரு ரசிகர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், காலை 6 மணி முதல் காட்சி தொடங்க தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட திரைத்துறையினர் சங்கங்கள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்திலிருந்து காலை 6 மணி சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

தனுஷ் பதிவு
தனுஷ் பதிவு

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகரும், இயக்குநருமான தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்”திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்! அனைவருக்கும் அன்பும், நன்றியும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Aakasamlo Oka Tara: "சினிமாவுக்கு வரலன்னா கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன்"- ஜி.வி பிரகாஷ்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ச... மேலும் பார்க்க

Aakasamlo Oka Tara: "ஆரம்பத்தில் நாயகியை மையமாகக் கொண்ட படமாகத் தோன்றியது; ஆனால்.."- துல்கர் சல்மான்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி ச... மேலும் பார்க்க

விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி

மு.மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ப்ரீத்தி அஸ்ராணி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'அப்பா குட்டி'. நவம்பர் 20ம் தேதி இந்தப் படம் வெளியாகயிருக்கும் நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (நவ.1... மேலும் பார்க்க

O.M: "அவனுக்கு எவ்ளோ திமிர் பார் எனத் திட்டு வாங்கினேன்" - வைரல் Reels-க்கு தனுஷ் விளக்கம்

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கிருத்தி சனோன் காதலர்களாக நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' பாலிவுட் படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் பட விளம்பர நிகழ்ச்சிக்காக மும்பையில் இருந்த த... மேலும் பார்க்க

ஜெய்பீம் : நம்பிக்கை ஒளி! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 42

`சினி'ஸ்கோப் 42ஜெய்பீம்அறிவொளி ஆசிரியை மித்ரா, ஒரு தேர்தல் அலுவலர் முன்பாக சில பழங்குடி மக்களை அழைத்துக்கொண்டு போய் நிறுத்தி ஒரு கோரிக்கை வைக்கிறார். அவரது வேண்டுகோள், அம்மக்களுக்கான ஓர் அடையாள அட்டை!... மேலும் பார்க்க

O.M: "இதெல்லாம் ஒரு Role-ஆ?" - மம்மூட்டியின் பேச்சைக் கேட்டு குலுங்கிச் சிரித்த தனுஷ்

'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சா... மேலும் பார்க்க