செய்திகள் :

கைகளைக் கட்டிப்போட்டு மாணவனைத் தாக்கிய ஆசிரியர்; திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் அதிர்ச்சி

post image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் சாய்ராம் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33) என்பவரின் 3 வயது மகன் ப்ரீகேஜி படித்து வருகிறான். இந்நிலையில் வகுப்பு ஆசிரியர் மற்றும் உதவியாளர் அந்த மாணவனின் கைகளைக் கட்டிப்போட்டு அடித்ததாகச் சொல்கிறார்கள்.

கைகள் கட்டப்பட்டுள்ள மாணவன்
கைகள் கட்டப்பட்டுள்ள மாணவன்

இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த சிறுவனின் பெற்றோர் பதறியுள்ளனர். சிறுவனிடம் கோபிநாத் கேட்டதற்கு டீச்சர் என் கையைக் கட்டிப்போட்டு அடிச்சுட்டாங்க என அழுதுள்ளான்.

இதையடுத்து, கோபிநாத் பள்ளிக்குச் சென்று விசாரித்திருக்கிறார். மேலும் வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்துள்ளார்.

இதில், சிறுவனின் இரு கைகளையும் கயிற்றால் கட்டி ஆசிரியரும், உதவியாளரும் தாக்கியது தெரியவந்தது. இதனை கோபிநாத் தன் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது, ஆட்டு, மாட்டைப் போல என் பிள்ளையின் கையைக் கட்டிப்போட்டு அடித்துள்ளனர். பல மாணவர்கள் முன்னிலையில் இந்தச் செயலைச் செய்துள்ளனர் என்றுள்ளார். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மற்றும் பெண் உதவியாளர் ஆகிய இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவன்

இந்நிலையில் பள்ளியில் 3 வயது சிறுவன் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆசிரியரையும், உதவியாளரையும் பணி நீக்கம் செய்தது. இந்தச் சிறுவனுக்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நிகழ்ந்திருக்கிறதா எனவும் விசாரிக்க வேண்டும் எனப் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

புதினுடன் எங்கும் செல்லும் ‘செகெட்’ அது என்ன? அந்தப் பெட்டியால் அணு ஆயுதங்களை ஏவ முடியுமா?

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கான சீனாவின் ஷென்சென் நகருக்குச் சென்றிருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். அங்கு அவருடன் இரண்டு ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஒரு பெட்டியை எடுத்துச் செல்க... மேலும் பார்க்க

உடுமலை: அலட்சிய மருத்துவமனையால் பறிபோன இளைஞரின் கால்; ரூ. 35.68 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம் மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் (24) 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, உடுமலை அரசு மருத... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு நோ... அவதூறு வழக்கு யெஸ் டு தொகுதி மறுவரையறை: குழப்பத்தில் திமுக MP-க்கள்! | கழுகார்

அவதூறு வழக்கு ‘யெஸ்’பாலியல் வழக்கு ‘நோ’...கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தேசிய மகளிரணி ஆணையமே அறிக்கை கேட்டிருக்கும் சூழலிலும் தமிழக காவ... மேலும் பார்க்க

`தலைமைக்குப் புகார்... அனுப்பியவர் மீதே நடவடிக்கையா?' - வெடிக்கும் பெரம்பலூர் விசிக விவகாரம்

"கட்சிப் பெயரைப் பயன்படுத்தி, எங்கள் கட்சி மாவட்டச் செயலாளர் கட்டப்பஞ்சாயத்து, கட்சிக்கு விரோதமான செயல், குற்றச் செயல்களில் ஈடுபட்டது பற்றித் தலைமைக்குப் புகார் அனுப்பினேன். உடனே, நான் வகித்து வந்த மா... மேலும் பார்க்க

"எனது கைக்கடிகாரத்தின் விலை ரூ.5,500 மட்டுமே" - வதந்திக்கு அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

அமைச்சர் ராஜ்மோகன் அணிந்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ரூ. 45,00,000 அளவுக்கு இருக்கும் என்றும், அது மிகவும் விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ச் வகையைச் சேர்ந்தது என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்ட... மேலும் பார்க்க