செய்திகள் :

'வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தை..!'- செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் விளக்கம்

post image

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தயாரித்திருக்கிறார்.

நவம்பர் 20 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் ஹைதராபாத்தில் நடந்த பட நிகழ்ச்சியின்போது தனுஷுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரை பவுன்சர்கள் தள்ளிவிட்ட போது தனுஷ் கண்டுகொள்ளாமல் மௌனமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரே விளக்கம் அளித்திருக்கிறார்.

தனுஷ்
தனுஷ்

" சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ குறித்து பலரும் பலவிதமாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியும். ஒரு சிறிய வீடியோ க்ளிப்பைப் பார்த்து தனுஷ் சாரின் குணத்தைத் தீர்மானிக்க வேண்டாம். ட்ரோல் செய்வது உங்களுக்குப் பழக்கமாக இருக்கலாம்.

வெறுப்பைப் பரப்புவது உங்கள் விருப்பமாக இருக்கலாம். ஆனால், தன் ரசிகர்கள் மீது அவர் காட்டும் அன்பை மட்டும் யாராலும் அழிக்க முடியாது. நீங்கள் எந்த அளவுக்கு வெறுப்பைக் காட்டுகிறீர்களோ, அதைவிட அதிகமாக எங்கள் அன்பும், அபிமானமும் அதிகரிக்கும். ஏனென்றால், தலைவர் யார் என்று எங்களுக்கு தெரியும். வீ லவ் யூ தலைவா... ஃபாரெவர்" என்று வீடியோ மூலம் விளக்கமளித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

"என் மூத்த மகள் விரும்பினால் அவரது தரப்பு விளக்கத்தை அவரே தெரிவிப்பார்" - நடிகர் அர்ஜுன் விளக்கம்

நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அன்ஜனாவின் திருமணம் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்துகொள்ளாதது பேசுபொருளான நிலையில் தற்போது அதுகுறித்த... மேலும் பார்க்க

"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் காரணம் என்ன?

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

"'டோரதி' படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன; அவைதாம் அந்தப் படத்தின் வெற்றி"- கீர்த்தி சுரேஷ்

பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இத... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் சில திரையரங்கங்களில் தனுஷின் 'O.M' திரைப்படம் வெளியாவதில் சிக்கல் - என்ன பிரச்னை?

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓம்’. சந்தனக் கட்டை கடத்தல் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்த... மேலும் பார்க்க

OM: ``முதல்வர் விஜய்க்கு நன்றி; ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்" - நடிகர் தனுஷ்

தமிழ்நாட்டில் 2023-ம் ஆண்டுக்கு முன்பு அதிகாலை சிறப்பு காட்சி நடைமுறையில் இருந்தது. இது படம் வெளியாகும் முதல் சில நாட்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கேட்கும் பொருட்டு நள்ளிரவு 1 மணி காட்சி, அதிகாலை 4 மற்ற... மேலும் பார்க்க