செய்திகள் :

KKR : 24 மடங்கு அதிகரித்த மதிப்பு! - 22% பங்குகளை அமெரிக்க கம்பெனிக்கு விற்ற நடிகை ஜூஹி சாவ்லா கணவர்

post image

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 55 சதவீத பங்கு இருக்கிறது. அவரது தோழியான நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு 45 சதவீத பங்கு இருக்கிறது. இந்த பங்கு ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜெய் மேத்தா பெயரில் இருக்கிறது. ஜெய் மேத்தா தன்னிடம் இருக்கும் பங்கில் பாதியை அதாவது 22.5 சதவீத பங்குகளை அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளார். இது முழுமையாக ரொக்கப் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெற்ற ஒப்பந்தம் என்றும், ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்த விற்பனை முழுமையடையும் என்று கூறப்படுகிறது.

இந்த விற்பனை ஒப்பந்த மதிப்பீட்டின்படி, கேகேஆர் (KKR) அணியின் மதிப்பு சுமார் 1.78 பில்லியன் டாலர்கள், அதாவது ஏறத்தாழ 16,634 கோடி ரூபாயாக உள்ளது. அதில் 22.5 சதவீத பங்கு ரூ.3,736 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, ​​நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், ஜூஹி சாவ்லா மற்றும் ஜே மேத்தா ஆகியோர் சேர்ந்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையைக் 75.09 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினர்.

ஜெய் மேத்தா, ஜூஹி சாவ்லா

தற்போதுள்ள அதன் மதிப்பு, வாங்கப்பட்ட தொகையை விட 24 மடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முறையான ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை. 22.5 சதவீத பங்குகளை வாங்கும் அமெரிக்காவின் ஏரெஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் விளையாட்டு அணிகளில் பங்குகள் உள்ளன.

இந்த ஆண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கைமாறும் மூன்றாவது ஐபிஎல் அணியாக கேகேஆர் இருக்கிறது. கடந்த மார்ச் மாதம், யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய கூட்டு நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு (சுமார் 1.78 பில்லியன் டாலர்) விற்றது. கடந்த மே மாதத்தில், லட்சுமி என். மிட்டல் மற்றும் ஆதித்யா மிட்டல் ஆகியோர், ஆதார் பூனாவாலாவுடன் இணைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 1.65 பில்லியன் டாலருக்கு (ரூ. 15,660 கோடி) வாங்கினர் என்பதும் குறிப்பிடத்தாக்கது.

"சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரத்தான் வேண்டும்!"- தோனி ஓய்வு குறித்து சாக்‌ஷி தோனி நெகிழ்ச்சி!

ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரது மனைவி சாக்‌ஷி தோனி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் கள... மேலும் பார்க்க

``IPL தொடரிலிருந்துதான் ஓய்வு: CSK-வுடன் தோனி பயணிப்பார்" - சீனிவாசன்

ஐபிஎல் தொடரில் வீரராக மகேந்திர சிங் தோனியின் பயணம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. வீரராகத் தனது ஓய்வை அறிவித்துள்ள அவர், வரும் 2027-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் CSK அணியின் புதிய ஆலோசகராக நியமிக... மேலும் பார்க்க

Dhoni : நிறைவேறாத ஆசையுடன் ஓய்வு பெற்ற தோனி! - பின்னணி என்ன?

ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு சீசனுக்கும் தோனி ஆடுவாரா மாட்டாரா எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். இறுதியில்... மேலும் பார்க்க

"சீதா ராம்... சீதா ராம்!" – சேவாக்குடன் போட்டியின் கடைசி நிமிடங்களை பகிர்ந்த மகன் ஆர்யவீர்

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதிப்போட்டி… 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது… தந்தையிடம் மனம் திறந்த 15 வயது ஆர்யவீர்!இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட வீரேந்திர சேவாக், த... மேலும் பார்க்க

நிதியை நிறுத்திய SAI; பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் பாய் - திணறும் பேட்மிண்டன் வீரர்கள்! என்ன பிரச்னை?

இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) மற்றும் இந்திய பேட்மிண்டன் சங்கம் (BAI - Badminton Association of India) இடையே வீரர்களின் போட்டிப் பயணத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட... மேலும் பார்க்க

NZ vs IND: 'இந்தத் தோல்வி எனக்கு கவலையை ஏற்படுத்திருக்கு, ஏன்னா.!'- கௌதம் கம்பீர் வருத்தம்

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியிருக்கிறார்.இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி... மேலும் பார்க்க