செய்திகள் :

```Start, Camera, Action' என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்"- எடப்பாடி பழனிசாமி

post image

சென்னை மாதவரத்தில் மத்திய வருவாய் புலனாய்வு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த வாகனத்தை சோதனை செய்ததில் 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``சென்னை மாதவரம் பகுதியில் 70 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மத்திய அரசின் வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இதன் சந்தை மதிப்பு 700 கோடி ரூபாய் வரை இருக்கும் என வருகின்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்
TVK Vijay | த.வெ.க - முதல்வர் விஜய்

போதைப்பொருளை ஒழிப்பதில் இன்றைய முதல்வர் தலைமையிலான அரசு தீவிரமாக இருப்பதாக டிஜிபி பிரஸ் மீட் கொடுத்த 24 மணி நேரத்திற்குள் இவ்வளவு பெரிய Drug Movement தலைநகரில் நடந்திருக்கிறது என்றால், டிஜிபி விடுத்த எச்சரிக்கைக்கோ, இன்றைய முதல்வரின் அரசின் மீதோ கொஞ்சம் கூட போதை மாபியாவுக்கு பயமே இல்லை என்று தானே இதைப் பார்க்க வேண்டும்?

மாநில அரசின் காவல்துறையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவோ இதை பறிமுதல் செய்திருந்தால் கூட, “ஆஹா… இந்த அரசு சொன்ன மாதிரியே Action-இல் இறங்கிவிட்டதே” என்று பாராட்டி இருக்கலாம். ஆனால், இந்த போதைப்பொருளைப் பிடித்தது மத்திய அரசின் DRI அமைப்பு! ஆளுகின்ற மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத லட்சணத்தில் தான் இன்றைய மாநில அரசும், காவல்துறையும், அதற்கு பொறுப்பான முதல்வரும் இருக்கிறார்கள். போதைப்பொருள் தடுப்புப் படைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ. 264 கோடியை வைத்து என்ன செய்தீர்கள் முதல்வர் விஜய்?

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் 70 கிலோ ஹெராயின் என்பதெல்லாம் இதுவரை நாம் கேள்விப்படாத அளவிலான வெட்கக்கேடான செய்தி. டி-ஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு காமராஜர் சாலையில் நீங்கள் Jogging போனதும் போதைப் பொருள் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டீர்களா? எல்லாவற்றையும் சினிமா கண்ணோட்டத்தில் பார்த்து, “Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு, Serious-ஆன இந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தமிழ்நாடு முதலீட்டு தகவல்கள் கசிவு: 15 பேரை அதிரடி நீக்கம் செய்த அமைச்சர் கீர்த்தனா?

தமிழ்நாடு அரசின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அமைப்பான 'தமிழ்நாடு வழிகாட்டி' (Guidance Tamil Nadu) நிறுவனத்தில் பணியாற்றி வந்த 15 உயர் அதிகாரிகள், ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட குற்றச்சாட்டில் அதிரடியாக... மேலும் பார்க்க

"காங்கிரஸ் பாரம்பர்யம் உள்ளவரால் இங்கே தொடர முடியாது..!"- பாஜகவிலிருந்து விலகினார் பத்மஜா வேணுகோபால்

கேரள மாநில முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைருமான மறைந்த கே.கருணாகரனின் மகள் பத்மஜா வேணுகோபால். இவரது சகோதரர் கே.முரளீதரன் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சராக உள்ளார். பத்மஜா வேணுகோபால் முன்பு கா... மேலும் பார்க்க

தவெக-வில் இணைந்த மகள் பொன்னரசி; அதிமுக முன்னாள் அமைச்சர், இந்நாள் மா.செ சண்முகநாதன் ஷாக் - பின்னணி?

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.கவின் முகமாக பார்க்கப்பட்டு வருபவர் சண்முகநாதன். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு கடந்த 2001, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களில் வெற... மேலும் பார்க்க

வி.எஸ் பாபு மறைவு: `எடப்பாடி முதல் அண்ணாமலை வரை' - அரசியல் தலைவர்கள் இரங்கல்

கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வி.எஸ்.பாபு அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.... மேலும் பார்க்க

`கள்ளக்குறிச்சிக்கும் இடைத்தேர்தல்; விஜய் தன்னை நிரூபிக்க..!’- தவெக எம்எல்ஏ விவகாரத்தில் தமிழிசை

கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் குறுந்தகவல் அனுப்பியதாக எழுந்திருக்கும் புகார், தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது சட்டரீத... மேலும் பார்க்க

'விஜய்க்கு பிடித்தமானவர்; நிறைவேறாத மினிஸ்டர் ஆசை!' - வி.எஸ்.பாபுவின் தவெக கதை!

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு காலமாகியிருக்கிறார். தவெகவில் கடந்த பிப்ரவரி மாதம்தான் இணைந்திருந்தார். ஆனால், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்ததன் மூலம் இப்போதைய முதல்வர் விஜய்க்கும் தவெக தொண்டர்... மேலும் பார்க்க