செய்திகள் :

"இந்த கொள்ளைக்கும் மீனாட்சிக்கும் தொடர்பில்லை" – தனிஷிக் நகைக்கடை திருட்டில் கைதான நிஷாந்த்

post image

மதுரை தனிஷிக் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி கேட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 

காவல்துறை தரப்பில் நிஷாந்தை  ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

நிஷாந்திடம் 5 நாட்கள் காவலில் விசாரணைக்கு செல்வது குறித்து நீதிபதி கேட்டபோது, “எல்லா நகையையும் கொடுத்துவிட்டேன், 5 நாட்கள் விசாரணைக்காக செல்ல விருப்பமில்லை , பயமாக இருக்கிறது ஒரு நாள் போதும் என பதிலளித்த நிஷாந்த் தொடர்ந்து, “ வலதுபுறம் தோளில் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மீனாட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என நீதிபதியிடம் கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதி, “ காவல் விசாரணை வழக்கு தொடர்பாக மட்டுமே பதிலளிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். 

நிஷாந்தின் வழக்கறிஞர் பெரியரசு பேசுகையில், “ நிஷாந்திற்கு வலது தோளில் அறுவைசிகிச்சை செய்துள்ள நிலையில் காவல்துறையினர் கையை பின்புறம் கட்டி வலதுபுறம் கையை திருகி தாக்கியுள்ளனர் கையில் காப்பு போட்டு காவல்துறையினர் அழைத்துவந்துள்ளனர்.  அனைத்து நகைகளும்மீட்கப்பட்டுவிட்டன. காவல் விசாரணை தேவையில்லை, விசாரணைக்கு சென்றால் துன்புறுத்தமாட்டார்கள் என்ற நிச்சயம் இல்லை” என்றார்

மதுரை மாவட்ட நீதிமன்றம்

காவல்துறை தரப்பு பேசும் போது, “நிஷாந்த் பயன்படுத்திய பைக் சேலத்தில் நிறுத்தியுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளி தப்பி செல்ல சிலர் உதவியதாக தகவல்கள் உள்ளது. அது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது; இன்னும் விசாரணை தொடக்க நிலையில் உள்ளது;  நிஷாந்த் நகைக்கடையில் எப்படி கொள்ளையில் ஈடுபட்டார் என செயல்முறை விளக்கம் கொடுக்கப்படவில்லை . இவ்வளவு பெரிய கொள்ளைச் சம்பவத்தில் நிஷாந்த் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது காவலில் எடுத்தால் மட்டுமே முழு உண்மை தெரியவரும். அவர் பயன்படுத்திய வாகனங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்” என்றனர்.

நகைக்கடை கொள்ளையில் நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் மீனாட்சிக்கு தொடர்பு இல்லை. காவல்துறையினர் 3 ஆட்டோக்கள் பறிமுதல் செய்துள்ளனர். அதில் இரண்டு தந்தை சுரேஷ் பெயரிலும்  ஒன்று நிஷாந்தின் தாயார் பெயரில் உள்ளது  என நிஷாந்த் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பேசுகையில், “காவல் ஆய்வாளர் கேட்டுள்ள 5 நாள் காவல் அதிகமாக உள்ளது. குற்றசம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விசாரணை செய்ய ஒரு நாள் போதுமானது என இந்நீதிமன்றம் கருதுகிறது. நிஷாந்தை விசாரணையின் போது எந்தவித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கக் கூடாது. சட்டத்திற்கு உட்பட்டுவிசாரணை நடத்தப்பட வேண்டும், வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்கலாம் என்ற நிபந்தனைகளுடன் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். 

காவல் விசாரணை அனுமதி அளிக்கப்பட்டநிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நிஷாந்த் அழைத்துசெல்லப்பட்டார்.

அப்போது காவல்துறை வாகனத்தில் இருந்த படியே செய்தியாளர்களிடம் பேசிய நிஷாந்த், “நகைக்கடை கொள்ளை வழக்கில் மீனாட்சிக்கு சம்பந்தமில்லை' என தெரிவித்தார்

கல்லூரிக்குச் சென்ற மாணவியை தடுத்து ஊர் சுற்றிய வாலிபர் - போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பனவிளை பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு இன்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி வ... மேலும் பார்க்க

இரண்டாவதும் பெண் குழந்தை... பிறந்த அன்றே புதைக்கப்பட்ட கொடூரம் - தந்தை, தாத்தா உட்பட 3 பேர் கைது!

ராமேஸ்வரம், சம்பை பகுதியைச் சேர்ந்த நாகபாண்டி (30) இவருக்கும், லோகநந்தினி (23) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலை... மேலும் பார்க்க

அரியலூர்: காணாமல் போன 3 வயது சிறுமி - 5 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!

அரியலூர் மாவட்டம், புங்கங்குழி ஊராட்சிக்குட்பட்ட சிலுப்பனுர் கிராமத்தில் வசிப்பவர்கள் மணிமாறன்-சரிதா தம்பதி. இவர்களது மூன்று வயது பெண் குழந்தை நிவிஷ்னா. நேற்று தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ம... மேலும் பார்க்க

`கொலையான ஆசிரியை குடும்பத்திற்கு இழப்பீடு என்னாச்சு?'- எஸ்.பிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணியாற்றியவர் ரமணி. இவரை காதலித்து வந்த மதன்குமார் என்பவர் ரமணி திருமணத்திற்கு மறுத்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு நவ.20ம்... மேலும் பார்க்க

மதுரை: சிகிச்சைக்கு சென்ற பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர்?- கைதுசெய்ய கோரி போராட்டம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது கணவர் சென்னையில் காவல்துறையில் பணிபுரிந்துவருகிறார்.இந்நிலையில் தன் குழந்தைக்கு சளி என்பதால் தனது குடும்ப மருத்துவரான விருது... மேலும் பார்க்க

சென்னை: மறுமணம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஜினீயர் - சிக்கியது எப்படி?

மதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள நிலையில் அவர் கணவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அவர் படித்துக் கொண்டே வேலை செ... மேலும் பார்க்க