A2B : ரூ.1,600 கோடி... கைமாறிய பெரும்பான்மையான பங்குகள்! - வாங்கியது யார் தெரியு...
ராமாயணா: ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது..." - யஷ்க்கு குரல் கொடுத்த நடிகர் ஷரத்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'ராமாயணா'. திரைப்படத்தில், ராவணனாக நடித்துள்ள நடிகர் யஷ்ஷிற்கு இந்திப் பதிப்பில் குரல் கொடுத்தவர் நடிகர் ஷரத் கேல்கர். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காளி கேத்தி' (Kaali Kheti) திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் ஷரத் கேல்கர், ராவணனின் கம்பீரமான குரலிலேயே, ``மூவுலகிலும் இனி ஒரே ஒரு ஆட்சிதான் நடக்கும், அது கேல்கரின் ஆட்சி...." என கலகலப்பாக பேசத் தொடங்கியவர்,
``உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், யஷ்ஷிற்கு நான் நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவித்தே ஆக வேண்டும். இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் விதத்தை வேறு யாராலும் செய்திருக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். அந்தக் கதாபாத்திரத்தை அவர் கையாண்ட விதமும், நிதானமும் அபரிமிதமானது. யஷ் திரையில் அவ்வளவு சிறப்பாக நடித்திருந்ததால்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சொல்லப்போனால், அவர் மிகச்சிறப்பாக நடித்திருந்த காரணத்தால்தான், அவருக்குப் பின்னணிக் குரல் கொடுப்பது எனக்கு மிகவும் சவாலான காரியமாக இருந்தது. படத்தையும், எனது குரலையும் நேசித்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

















