அயலக உயர்கல்வித் திட்டம்: "மாணவர்களை மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்?" - ஸ...
வீட்டுக்குள் சினிமா... மொட்டைமாடியில் Jacuzzi - மாதம்பட்டியில் வீக் எண்டுக்கான ஒரு கனவு வீடு.!
நகர வாழ்க்கையின் இரைச்சலிலிருந்து விடுபட்டு, வார இறுதியில் குடும்பத்துடன் இயற்கையின் மடியில் நேரம் செலவிட வேண்டும் என்ற ஆசைக்கு, கோவை மாவட்டம் மாதம்பட்டியில் வடிவம் கொடுத்திருக்கிறார் ஆர்க்கிடெக்ட் சிங்காரம். 8,500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இந்த வீடு, வீடா ரிசார்ட்டா என்று யூகிக்க முடியாத அளவுக்கு இரண்டையும் ஒருசேரத் தருகிறது.
தேவகோட்டையைச் சொந்த ஊராகக் கொண்ட ஆர்க்கிடெக்ட் சிங்காரம், கோவையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாடு காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்கில் பி.இ சிவில் படித்த பின், பத்து ஆண்டு அனுபவத்தின் அடிப்படையில் 'கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ட்' தேர்வை நேரடியாக எழுதி, ஆர்க்கிடெக்ட்டாகப் பணியைத் தொடங்கினார். ‘Ideaa spaace’ நிறுவனம் மூலம் 23 ஆண்டுகளாக இயங்கி வரும் இவரது வடிவமைப்பு, People, Place, Purpose என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்த 24 ஆண்டு பழைமையான பலாமரம், மா, நெல்லி, கொய்யா மரங்கள் எதையும் வெட்டாமல், அவற்றுக்கு இடையே வீட்டை அமைத்திருப்பது சிறப்பு. அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் ‘Central Spine’ நடைபாதையும், பகலில் சூரிய ஒளியும் இரவில் நிலவொளியும் விழும் முற்றத்தின் திறந்தவெளி பூஜையறையும் இந்த வீட்டின் அழகைக் கூட்டுகின்றன.
வீட்டுக்குள் சினிமா... மொட்டைமாடியில் Jacuzzi
முதல் தளத்தில் 7.1.4 Dolby Atmos வசதியுடன் கூடிய ஹோம் தியேட்டர் உள்ளது. ஜன்னல்களைத் திறந்து பால்கனியுடன் இணைத்தால், 20 முதல் 30 பேர் கூடும் இடமாகவும் மாறும். மொட்டைமாடியில் தனி பிரைவேட் பாரும் திறந்தவெளி Jacuzzi-யும் உள்ளன. முதலில் நீச்சல் குளம் திட்டமிடப்பட்டிருந்தது; பாம்புகள் நடமாட்டம் இருந்ததால் அது Jacuzzi ஆக மாறியது. அந்த இடத்தில் இப்போது கிச்சன் கார்டன் உருவாகிறது.









நாய்கள் மீது பிரியம் கொண்ட உரிமையாளருக்காக, அவை சுதந்திரமாக விளையாட கொட்டில்களுடன் தனி இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வார இறுதிக் கனவை நேர்த்தியாக நிஜமாக்கியிருக்கிறார் சிங்காரம்.
வெளிச்சத்தில் மிளிரும் பூஜை அறை, இயற்கை அலங்காரம் என இந்த வீட்டில் ஆச்சர்யங்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த வீடு குறித்த முழுமையான கட்டுரையை படிக்க... Click Here LINK
















