``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO...
ஜெம் வீரமணி வழக்கு: அருண் ஐபிஎஸ் உட்பட 7 காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் சேர்ப்பு
சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஜெம் வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் அது தொடர்பான விவகாரங்களை விசாரிக்க, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரால் 24.09.2026 அன்று சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையரின் மேற்பார்வையில் செயல்பட்ட இந்தச் சிறப்பு புலனாய்வுக் குழு உருவாக்கப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது தாயார் அளித்த புகார்களின் அடிப்படையில், 9 பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த 7 வழக்குகளில், ஒரு வழக்கு தொடர்பாக 11.11.2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், `பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 27.09.2026 அன்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயதுடைய அந்தச் சிறுமி, வீரமணியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது ஓட்டுநர்கள் பார்த்திபன் பாபு ஆகியோர், சிறுமியை அழைத்து வந்து வீரமணியின் இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். அங்கு அச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் செயல்களுக்காக வீரமணி மற்றும் அவரது ஓட்டுநர்கள் பார்த்திபன், பாபு ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 366, 506(2), போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட 46 நாட்களுக்குள்ளாகவே, 40 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் சுமார் 720 பக்கங்கள் கொண்ட இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 11.11.2026 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், இந்த வழக்கை முறையாகக் கையாளத் தவறியதாகக் கூறி, சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐ.பி.எஸ்., டி.எஸ்.பி. யாஸ்மின் மற்றும் 5 காவல்துறையினர் மொத்தம் 7 போலீஸ் அதிகாரிகளின் பெயர்களும் இந்தக் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

















