செய்திகள் :

கேரளம்: தொல்லை கொடுத்த காதலனைக் கொல்ல கொட்டேஷன்; காதலியைத் தட்டித் தூக்கிய போலீஸ்; என்ன நடந்தது?

post image

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பெருமொடியூர் பனங்காட்டுதொடி பகுதியைச் சேர்ந்தவர் சஃபானா (19). இவரும் பட்டாம்பி கொண்டூர்கரையைச் சேர்ந்த 19 வயது வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், காதலன் தன்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாகவும், தனக்குச் சுதந்திரம் அளிப்பதில்லை என்றும் கருதிய சஃபானா, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காகத் தனது தோழிகளிடம் ஆலோசனை கேட்டதுடன், அவர்கள் கூறியபடி கூலிப்படை உதவியை நாடியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சஃபானா மலப்புரம் மாவட்டம் திரூர் வடக்கு அன்னாரா பகுதியில் உள்ள தனது தோழிகள் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

அவரைத் தேடிக்கொண்டு காதலனும், அவரது நண்பரும் நள்ளிரவில் திரூருக்கு வந்துள்ளனர். சஃபானாவைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்களை அழைத்து வருவதாகக் கூறி சஃபானாவின் தோழியான திரூர் அன்னாராவைச் சேர்ந்த நாதியா (20) என்பவர் ரயில் நிலையப் பகுதிக்கு வந்துள்ளார். அவருடன் பரவண்ணா பகுதியைச் சேர்ந்த இர்ஷாத் (28), அசாருதீன் (25) ஆகியோரும் வந்திருந்தனர்.

ரயில் நிலையப் பகுதியில் இருந்து தாழேபாலம் பைபாஸ் வழியாக இவர்களை அழைத்துச் சென்ற கும்பல், முதலில் பைக்கில் அழைத்துச் சென்று, பின்னர் மற்ற கூட்டாளிகள் தயாராக நின்ற இடத்தில் வைத்து இருவரையும் காரில் கடத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

காருக்குள் வைத்து காதலனையும், அவரது நண்பரையும் அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. மேலும், காதலனின் செல்போனையும் பறித்துக் கொண்ட அந்தக் கும்பல், அதிகாலை 1.30 மணியளவில் தாழேபாலம் ஆற்றங்கரையோரம் சாலையில் இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வீசிவிட்டுத் தப்பியோடியது.

காதலனுடன் வந்திருந்த நண்பர் உடனடியாக திரூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திரூர் காவல் ஆய்வாளர் ஜலீல் கருத்தேடத் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், திரூர் தாழேபாலம் பகுதியில் வைத்து காதலி சஃபானா (19), அவரது தோழிகளான திரூர் வடக்கு அன்னாரா புதுக்குளங்கரை வீட்டைச் சேர்ந்த நாதியா (20), ரபீபா (25), பரவண்ணா குட்டியசனின் புரக்கல் வீட்டைச் சேர்ந்த இர்ஷாத் (28), பதனத் வீட்டைச் சேர்ந்த அசாருதீன் (25) ஆகிய 5 பேரையும் போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

காதலனை கைதுசெய்ய கொட்டேஷன் கொடுத்த சஃபான மற்றும் அவரது தோழிகள்
காதலனை கைதுசெய்ய கொட்டேஷன் கொடுத்த சஃபான மற்றும் அவரது தோழிகள்

போலீஸ் விசாரணையில், காதலன் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாலேயே அவரை ஒழித்துக்கட்ட நண்பர்களுக்குக் கொட்டேஷன் கொடுத்ததாக சஃபானா தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழக்கில் கைதாகியுள்ள இர்ஷாத், அசாருதீன் ஆகிய இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர்கள் என்பதும், கடலோரப் பகுதிகளில் பல்வேறு கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் திரூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தீபாவளிக்கு ஊருக்குச் சென்ற பானி பூரி வியாபாரி - ஓட்டைப் பிரித்து நுழைந்த கொள்ளையர்கள் கைவரிசை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் மகன் கோவிந்தராஜ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகில் உள்ள அவினாசி ரோடு, ராமநாதபுரம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித... மேலும் பார்க்க

AI-யை மனிதனாக நம்பியதால் விபரீதம்: `உறுப்பு விற்பனை ஆசை' - 4 வயது சிறுவனின் உடலை துண்டாடிய கொடூரம்!

சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராம்ஜீத் ராம் (36), தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு சன்னா என்ற கிராமத்திற்குப் பிழைப்புத் தேடி இடம்பெயர... மேலும் பார்க்க

"தமிழகத்தில் பெருகி வரும் துப்பாக்கிக் கலாசாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

"கடந்த ஆண்டு பாமக நிர்வாகி சக்கரவர்த்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோதே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிக் கலாசாரம் பரவி வருவது குறித்து எச்சரித்தேன்" என்று பாமக தலைவர் அன்பும... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் தகராறு: குடியரசுத் தலைவர் மாளிகை பாதுகாப்பு வீரர் மீது துப்பாக்கிச் சூடு!

இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையின் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சௌரப் தோமர். இவருக்கு வயது 26. இவர் தீபாவளியைக்... மேலும் பார்க்க

தமிழக ஊரக வளர்ச்சித் துறை வங்கிக் கணக்குகளில் ரூ. 22 கோடி கொள்ளை - சைபர் க்ரைம் கும்பல் கைவரிசை!

மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஒரு பணியாக ஊரக பகுதிகளில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார நல மைய கட்டடங்கள் ... மேலும் பார்க்க

கேரளம்: வாழைத்தார்களில் MDMA போதைப்பொருள் கடத்தல்; மாநில விருது பெற்ற முன்மாதிரி விவசாயி கைது

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள பாயிப்பாடு பகுதியைச் சேர்ந்தவர் 'டேனி' என்றழைக்கப்படும் தனேஷ் எஸ். நாயர் (31). தனேஷ், 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியில் தங்கி வேளாண் வணிகம் ... மேலும் பார்க்க