செய்திகள் :

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகைத் திருவிழா - ரோப் காரில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு!

post image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தலத்தில் நரசிம்மர் 11 மாதங்கள் கண்களை மூடியபடி யோக நிலையிலும், கார்த்திகை மாதத்தில் மட்டும் கண்களை திறந்து அருள்பாலிப்பதாகவும் ஐதீகம் இருக்கிறது.

சிறப்புமிகுந்த இந்த நாள்களில், நரசிம்மரை தரிசிப்பது மிகவும் விசேஷம் என்பதால், பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் கார்த்திகைத் திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, மலையின் உச்சிக்குச் சென்று யோக நரசிம்மரை தரிசிக்கும் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சென்றுவர ரோப் கார் சேவையை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரோப் கார்

அதன்படி, கார்த்திகை மாதம் முழுவதும் காலை 6.30 மணி முதல் மாலை 3.15 மணி வரை ரோப் கார் இயக்கப்படும். இதில், ஒரு மணி நேரத்துக்கு 120 பக்தர்கள் பயணம் செய்யலாம். மேலும், மாலை 3.15 முதல் 5.30 மணி வரை மலை அடிவாரத்தில் இருந்து மலைக் கோயிலுக்குச் செல்ல ஒரு வழிப் பயணத்துக்கு மட்டுமே முன்பதிவு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக, 4 நபர்கள் முன்பதிவு செய்யலாம்.

ரோப் கார் பயணத்துக்கு வருகைத் தரும் பக்தர்கள் தங்களின் போட்டோவுடன்கூடிய அடையாள அட்டை எடுத்துக்கொண்டு 20 நிமிடத்துக்கு முன்னதாகவே வந்துவிடவேண்டும். காலதாமதாக வரும் பக்தர்கள் ரோப் காரில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த மாதம் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக மட்டுமே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகூர் தர்காவில் 470-வது கந்தூரி விழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடக்கம்!|Photo Album

ஆன்மிகமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் நாகூர் தர்கா மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நாகூர் ஆண்டவரின் 470-வது உரூஸ் முபாரக் விழா,... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. ஆறு நாட்கள் நடைபெற... மேலும் பார்க்க

திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட... மேலும் பார்க்க

திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். அத்தகைய பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாஜலபதியை ஆண்டுதோறும் தோராயமாக 2.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாதந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களு... மேலும் பார்க்க