செய்திகள் :

நாகூர் தர்காவில் 470-வது கந்தூரி விழா கோலாகலம்; கொடியேற்றத்துடன் தொடக்கம்!|Photo Album

post image

ஆன்மிகமும் பாரம்பரியமும் சங்கமிக்கும் நாகூர் தர்கா மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் நாகூர் ஆண்டவரின் 470-வது உரூஸ் முபாரக் விழா, புனிதக் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

கொடியேற்றத்துக்கு முன் நடைபெற்ற ஊர்வலம்!

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தர்காவில், ஹஸ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) அவர்களின் 470-வது உரூஸ் முபாரக் விழாவை முன்னிட்டு, நவம்பர் 10-ம் தேதி புனிதக் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா
நாகூர் தர்கா

இதையொட்டி, அன்று நண்பகல் 12 மணியளவில் தர்காவின் புனிதக் கொடி ஊர்வலம் தொடங்கியது. நாகூரின் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், இரவு 8 மணியளவில் தர்காவை வந்தடைந்தது.

ஊர்வலத்தைக் காணவும், புனிதக் கொடியைத் தரிசிக்கவும் ஏராளமானோர் திரண்டனர்.

ஐந்து மினாராக்களில் ஏறிய புனிதக் கொடி!

தொடர்ந்து, இரவு 11.30 மணியளவில் நாகூர் தர்கா கலீபா டாக்டர் கலீஃபா மஸ்தான் சாஹிப் காதிரி தலைமையில் சிறப்புத் துஆ ஓதப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தர்காவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்து மினாராக்களில் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வின் மூலம் 470-வது உரூஸ் முபாரக் விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

நவம்பர் 20-ல் சந்தனக்கூடு நிகழ்ச்சி!

கொடியேற்றத்தைத் தொடர்ந்து, வரும் நாள்களில் பல்வேறு மார்க்க மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் புனிதச் சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நவம்பர் 20-ம் தேதி அதிகாலை நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் தர்கா கலீபா டாக்டர் கலீஃபா மஸ்தான் சாஹிப் காதிரி, புனித ரவ்லா ஷரீஃபில் சந்தனம் பூசும் சடங்கை நிறைவேற்ற உள்ளார்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகூருக்கு வருகை தர உள்ளனர். இதனால் நாகூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. ஆறு நாட்கள் நடைபெற... மேலும் பார்க்க

திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், புகழ்பெற்ற `திருக்கார்த்திகை தீபத் திருவிழா’ வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட... மேலும் பார்க்க

திருப்பதி: பக்தர்களுக்கான புதிய வழிகாட்டிச் செயலி... Venkatadri App-ன் 7 முக்கிய அம்சங்கள் தெரியுமா?

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பார்கள். அத்தகைய பிரசித்திபெற்ற திருப்பதி வேங்கடாஜலபதியை ஆண்டுதோறும் தோராயமாக 2.5 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், மாதந்தோறும் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களு... மேலும் பார்க்க

பெரம்பூர்: 53 அடி உயரம்; 3000க்கும் மேற்பட்ட பொம்மைகள்; உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொலு

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த பிரமாண்ட நவராத்திரி கொண்டாட்டம், பாரம்பர்யத்தையும் கலைநயத்தையும் இணைத்து சென்னையின் கலாசார அடையாளமாக உருவெடுத்த சாதனை!சென்னையின் நவராத்திரி கொண்டாட்டங்... மேலும் பார்க்க