செய்திகள் :

PIN Code-ல் தேவநாகரி எண்கள்? ``மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை எதிர்ப்போம்"- சு.வெங்கடேசன்

post image

இந்திய அஞ்சல்துறையின் அஞ்சல் குறியீட்டு எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்கள் பயன்படுத்தப்பட்டதாக சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ``இந்திய அஞ்சல்துறை, அஞ்சல் குறியீட்டு எண்களாக (PIN Code) சர்வதேச அராபிக் எண்களுக்குப் பதிலாக தேவநாகரி எண்களைப் பயன்படுத்தி இந்தியைத் திணிக்க முயற்சித்தது. இதனைக் கண்டித்து அக்டோபர் 25-ம் தேதி தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவரிடம் விளக்கம் கோரி கடிதம் எழுதியிருந்தேன். அக்கடிதத்தில் தேவநாகரி எண்களைப் பயன்படுத்துவது அஞ்சல் துறை விதிகளுக்கு முற்றிலும் முரணானது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இது தொடர்பாக, தெற்கு மண்டல அஞ்சல் துறைத் தலைவர் எனக்கு அக்டோபர் 28-ம் தேதி விளக்கம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு அனுப்பப்பட்ட 16.10.2026 தேதியிட்ட கடிதத்தை (DO letter), இந்தி மொழியில் மொழிபெயர்க்கும்போது, ​​அனுப்புநர் முகவரியில் உள்ள அஞ்சல் குறியீட்டு எண் (PIN Code) தவறுதலாக தேவநாகரி எண்களில் அச்சிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய பிழைகள் ஏற்படாதவாறு உரிய கவனம் செலுத்தப்படும் என்று உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார். தவறை ஒப்புக்கொண்டு தனது கடிதத் தலைப்பில் (Letter pad) இருந்த இந்தி அஞ்சல் எண்களை அஞ்சல்துறைத் தலைவர் நீக்கியுள்ளார். இந்தியை மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கும் எல்லா முயற்சிகளையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப் 'விடாப்பிடி' ஆதரவு

பீட் ஹெக்செத் - ஈரான் போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எவ்வளவு பங்குண்டோ, அதை விட ஒரு படி அதிகமாக இவருக்கு உண்டு. யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்.ஈரான் போ... மேலும் பார்க்க

SIR: ``யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்" - டி.எம் கிருஷ்ணா

இந்தியாவின் மாபெரும் சிக்கலுக்குரிய விஷமாக மாறியிருப்பது எஸ்.ஐ.ஆர். எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர். அதன் அடிப்படை... மேலும் பார்க்க

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

'சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' - அமைச்சர் ஷாஜகான் பேட்டி

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்து நடப்பதற்கு மது மற்றும் போதை பழக்கமே முக்கிய காரணியாக உள்ளது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்... மேலும் பார்க்க

"கூட்டணியில் இருந்துக்கொண்டே தவெக அரசை விமர்சிக்கிறார்கள்!" - வைகோ குற்றச்சாட்டு; பெ.சண்முகம் பதிலடி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அந்தக் கட்சிக்கு 108 இடங்களை மட்டுமே வழங்கியிர... மேலும் பார்க்க

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" - ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோக... மேலும் பார்க்க