செய்திகள் :

சம்பாதிப்பது மட்டுமே போதாது இளைஞர்களே!

post image

ஹலோவாசகர்களே..!

இளைய தலைமுறையினர் மீது எப்போதுமே ஒரு புகார் உண்டு. ‘சம்பாதிப்பதைவிட செலவழிப்பதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள், நிதித் திட்டமிடலே அவர்களிடம் இல்லை’ என்பதே அந்தப் புகார். ஆனால், அந்த எண்ணத்தைப் பொய்யாக்கியிருக்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று.

‘How India Saves 2026’ என்ற பெயரில் Stable Money மற்றும் YouGov நிறுவனம் இணைந்து நடத்திய அந்த ஆய்வில், இந்தியர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கங்கள் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன. இதில் கலந்துகொண்டவர்களில் 83% பேர் சேமிப்பு அல்லது முதலீட்டில் ஈடுபடுவதாகச் சொல்கிறது அந்த ஆய்வு. அதிலும், இவர்களில் 65% பேர் 30 வயதுக்கு முன்பும், 39% பேர் 18 - 25 வயதுக்குள்ளும் சேமிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது மகிழத்தக்க செய்தி.

‘ஜென் எக்ஸ்’ தலைமுறைப் பிரிவில் 35% பேர் ஓய்வுக்கால நிதி உருவாக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ‘ஜென் ஸி’ பிரிவினரில் 26% பேர் சொந்த வீடு வாங்குவதையே முதன்மை நிதி இலக்காகக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இது, இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டுவரும் முக்கிய நிதி மாற்றத்தைக் காட்டுகிறது.

இந்தச்சூழலில், இந்தியக் குடும்பங்களின் கடன் வாங்கும் விகிதம், ஜி.டி.பி-யில் சுமார் 46% வரை உயர்ந்துள்ளதை இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது வரலாறு காணாத மாற்றம். அதே நேரம், ஒட்டுமொத்த கடனில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, வாகனக் கடன், நுகர்வு கடன் மட்டுமே 58 சதவிகிதமாக இருப்பதும் மிகவும் ஆபத்தானது. இந்தியக் குடும்பங்களின் கடன் குறித்த புள்ளிவிவரங்கள், இளைஞர்களின் நுகர்வு, செலவு முறை போன்றவற்றில் அவர்கள் இன்னும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

இளைய தலைமுறையினரிடம் முதலீடு, சேமிப்பு ஆர்வம் இருக்கிறது. ஆனால், தங்களை திசைதிருப்பும் நுகர்வு சந்தையில் இருந்து அவர்கள் தங்கள் உணர்வுகளை சுயகட்டுப்பாட்டுடன் கையாள வேண்டும். அவசியத்துக்கும் ஆடம்பரத்துக்கும் வித்தியாசத்தை உணர வேண்டும். எதிர்பாராத வேலை இழப்பு, மருத்துவச் செலவு, குடும்பப் பொறுப்புகள் போன்ற நெருக்கடிகளைச் சமாளிக்கும் நிதி வலிமை அவசியம். அதீத ஆர்வத்தால் புரியாத முதலீட்டுத் திட்டங்களிலும், அதிக லாபம் தருவதாகக் கூறும் ஆபத்தான திட்டங்களிலும் பணத்தைப் போடக் கூடாது.

இளைஞர்களுக்கு நாம் சொல்ல வருவது, அதிகம் சம்பாதிப்பது மட்டுமே செல்வத்தை உருவாக்காது; சம்பாதிக்கும் பணத்தைச் சரியாக நிர்வகிப்பதில்தான் இருக்கிறது வெற்றி. முதல் சம்பளத்திலிருந்தே சேமிக்கத் தொடங்குங்கள். சிறிய தொகையாக இருந்தாலும் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள். கடனைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். முதலீடு செய்யும் ஒவ்வொரு திட்டத்தையும் புரிந்துகொண்டு செயல்படுங்கள். வெகு சீக்கிரமே நீங்கள் பொருளாதார பலம் பெறுவீர்கள்!

பெற்றோர்களே... உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டிய 10 பண ரகசியங்கள் இவைதான்!

‘‘என் மகனை நல்லா படிக்க வச்சேன். படிச்சுட்டு கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சு கைநிறைய சம்பளமும் வாங்குறான். ஆனா என்ன பிரயோசனம்? இன்னைக்கு 20 லட்சம் ரூபாய் கடனாளியா நிக்கிறான்!’’ என மனம் கலங்கிச் சொன்... மேலும் பார்க்க

எகிறும் விலைவாசி... 10,000 ரூபாயில் தீபாவளி பட்ஜெட்! கடனில் சிக்காமல் கொண்டாடலாமே..!

அரிசி முதல் பருப்பு வரை அத்தனை அத்தியாவசிய பொருள்களின் விலையும் எகிறிவிட்டது. புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுதான் தீபாவளியின் ஸ்பெஷலே. ஆனால், அவற்றின் விலையும் நடுத்தர, ஏழை மக்கள் அச்சப்படும் அளவுக்கு உ... மேலும் பார்க்க

Binance-க்கு விழுந்த அடி! கிரிப்டோ வரலாற்றின் மிகப்பெரிய கொள்ளையில் $6.3 பில்லியன் மாயம் - பின்னணி!

கிரிப்டோகரன்சி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு பிரம்மாண்டமான சைபர் தாக்குதலில், உலகின் மிகப்பெரிய கிரிப்டோ எக்ஸ்சேஞ்சான Binance-இலிருந்து சுமார் $6.3 பில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் 52,000 கோடி ர... மேலும் பார்க்க

ஃபின்ஃபுளூயன்சர்கள்: விழிப்புணர்வோடு பொறுப்புணர்வும் தேவை!

ஹலோ வாசகர்களே..!இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மக்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஃபின்ஃபுளூயன்சர்கள் (Finfluencers) முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஆனால், அனுபவமின்மையும் பக்குவமின்மையும் சில ந... மேலும் பார்க்க

பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் ஷாப்பிங் மைண்ட்செட்... ஜாக்கிரதை மக்களே!

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால்தான் துணிக்கடைகளிலும், மால்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால், இன்றைக்கு எப்போது பார்த்தாலும் கடைகளில் பரவலாகக் கூட்டம் இருக்கவே செய்கிறது. காரணம், ஷாப்பிங் செ... மேலும் பார்க்க

பி.எஃப் பணத்தை அடிக்கடி எடுப்பவரா நீங்கள்? 60 வயதில் உங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்து!

குமரேசனுக்கு இப்போது 60 வயது. மூன்று நாள்களாக உடம்பு படுத்தி எடுக்க, ஆஸ்பத்திக்குப் போக பணம் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார். வேலைக்குச் சென்ற காலத்தில் மாதச் சம்பளம் வந்துகொண்டிருந்தது. தாராளமாகப... மேலும் பார்க்க