செய்திகள் :

``இனி Nvidia-வின் நிர்வாகக் குழுவிலும் இருக்கமாட்டார்" - ராஜினாமாவை அறிவித்த CEO ஜென்சன்

post image

உலகப் புகழ்பெற்ற ‘என்விடியா’ (Nvidia) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங். இவர் தனது மனைவி லோரி ஹுவாங்கை திருமணம் செய்து 41 ஆண்டுகள் ஆகின்றன.

இவர்களுக்கு மேடிசன் என்ற மகளும் உள்ளார். 2025 மே மாதம், தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரின் 'மெகாஸ்பீட்' (Megaspeed) நிறுவன முன்னாள் பெண் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் உணவருந்த சென்றுள்ளார்.

அங்கு ஜென்சனின் மகள் மேடிசன் மற்றும் அவரது நிச்சயதார்த்த கணவரும் உடன் இருந்துள்ளனர். அந்த விருந்தின்போது ஜென்சன், ஆலிஸின் இடுப்பில் கைபோட்டு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதை அவரது மகளே தனது கைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளார்.

ஜென்சன் ஹுவாங்
ஜென்சன் ஹுவாங்

ஆலிஸ் ஹுவாங், சீனாவின் அரசு உளவு அமைப்பிற்கு (MSS) நெருக்கமானவர் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்தது. என்விடியா நிறுவனத்தின் அதிநவீன AI சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆலிஸ் மூலமாக சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கணினி வளங்கள் மற்றும் சிப்கள் சீன மின்-வணிக நிறுவனமான 'அலிபாபா'விற்குச் சட்டவிரோதமாகக் கைமாறியிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது.

அமெரிக்க அரசின் உளவுத்துறையும் விசாரணை அமைப்புகளும் தன் பின்னணியைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கியதால், நவம்பர் 8, 2026 அன்று ஜென்சன் ஹுவாங் என்விடியா ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், தான் தனது மனைவிக்குத் துரோகம் செய்து ஆலிஸுடன் தொடர்பில் இருந்ததை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

ஜென்சனின் இந்த ஒப்புதல் வெளியானதும் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வு ஏற்பட்டது. வெறும் 30 நிமிட வர்த்தகத்தில் அவரது சொத்து மதிப்பில் 7.4 பில்லியன் டாலர் (சுமார் ₹60,000 கோடிக்கும் மேல்) சரிந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 8-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்குச் சென்றார்.

ஜென்சன் ஹுவாங்
ஜென்சன் ஹுவாங்

தற்போது இந்த உணவக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திருமணம் மீறிய தொடர்பு ஜென்சனின் மகளுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒரு "திறந்த ரகசியமாகவே" இருந்திருக்கிறது என்பதும், அமெரிக்க அரசு நெருக்கடி கொடுத்த பிறகே ஜென்சன் இதை ஒப்புக்கொண்டார் என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. அதேசமயம், ஜென்சன் சீனா ஏஜென்ட்டின் வலையில் விழுந்தாரா என்பது குறித்து என்விடியா நிறுவனம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற 'என்விடியா' (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஹுவாங் இனி என்விடியா நிர்வாகக் குழுவிலும் இருக்க மாட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான (CFO) கோலெட் கிரெஸ், தற்காலிக சி.இ.ஓ.வாகப் பொறுப்பேற்றுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருவண்ணாமலையில் திடீர் தரிசனம்; சோகமாகக் காணப்பட்ட தவெக MLA அருள் விக்னேஷ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தியை அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தி.மு.க ... மேலும் பார்க்க

``முன்பு 246 பள்ளிகள் மூடப்பட்டன; தவெக ஆட்சியில் அப்படி நடக்காது’’ - அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் 2023-24, 2024-25 மற்றும் 2025-26-ம் ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்... மேலும் பார்க்க

நகை திருடி ஊர் மக்களுக்கு தீபாவளி பரிசு வழங்கி கொண்டாட்டம்; சினிமா பாணியில் தப்ப முயன்ற நடிகர் கைது

சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில் குமாரி (66) என்ற மூதாட்டி கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பயணம் செய்தார். தனது பேத்தியின் திருமணத்துக்காகச் சேர்த்து வைத்திருந்த 47 பவுன் நகைகளை பையில் வைத்து, படுக்கைக... மேலும் பார்க்க

கோவை: தவெக ஒன்றியச் செயலாளர் மீது பெண் நிர்வாகி பாலியல் தொல்லை புகார்; பின்னணி என்ன?

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செளமியா என்பவர், அப்பகுதி த.வெ.க ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் த.வெ.க காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி பாலியல... மேலும் பார்க்க

மோகன் (எ) சிங்கம்! - கடல் முழுங்கிய காசிமேட்டு மீனவரின் கதை

ஆந்திராவில் கரையைக் கடந்த முரசு புயலின் சூறாவளிக் காற்றுக்கு 9 மீனவர்களை இரையாகக் கொடுத்திருக்கிறது காசிமேடு. தங்கள் வீட்டின் கடலோடிகளைப் பறிகொடுத்த துயரிலிருந்து இன்னும் மீளாத அந்தக் குடும்பங்களைச் ச... மேலும் பார்க்க

ஆந்திராவைப் பின்னுக்குத் தள்ளி ரூ.2000 கோடி முதலீடு; அள்ளிய தமிழகம்; சந்திரபாபுவின் புது ரூட் என்ன?

தமிழ்நாட்டிற்கு வரும் முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூட் மாறுகின்றன என்கிற குற்றச்சாட்டு தற்போது பரவலாக இருந்து வருகிறது.இந்த நேரத்தில், ஆந்திரப் பிரதேசத்தை விடுத்து பிரேசில் நிறுவனம் ஒன்று தமிழ்... மேலும் பார்க்க