செய்திகள் :

Doctor Vikatan: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி... கர்ப்ப்பை இல்லாத ஆண்களுக்கும் அவசியம்!

post image

Doctor Vikatan: இதுநாள் வரை HPV தடுப்பூசி என்பது பெண்களுக்குப் போடப்பட வேண்டியது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், அதை  ஆண்களுக்கும் போட வேண்டும் என்கிறாள் என் தோழி... அது உண்மையா... காரணம் என்ன... ?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

ஹெச்பிவி (HPV) தடுப்பூசி குறித்துப் பலரிடம் இன்னும் தவறான எண்ணமே உள்ளது. இது பெண்களுக்கு மட்டுமான தடுப்பூசி அல்ல; ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் போட வேண்டியது. புற்றுநோயைத் தடுக்கும் மிக முக்கியமான தடுப்பூசி இது.

HPV என்பது Human Papilloma Virus எனப்படும் ஒரு வகை வைரஸ் ஆகும். இது பெரும்பாலும் தாம்பத்ய உறவு மூலமாகவும், சில சமயங்களில் தொடுதல் மூலமாகவும் பரவக்கூடியது. இதில் 200-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகள் மட்டுமே மிகவும் ஆபத்தானவை. அவையே புற்றுநோயை உருவாக்குகின்றன. இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் இருப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer). 99 சதவிகித கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு இந்த HPV வைரஸே முக்கியக் காரணமாக அமைகிறது.

ஆண்களுக்கும் ஏன் இந்தத் தடுப்பூசி போட வேண்டும்?
'ஆண்களுக்குத்தான் கர்ப்பப்பை இல்லையே, பின் ஏன் அவர்களுக்கு இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும்?' என்ற கேள்வி பல பெற்றோர்களுக்கு எழுவது இயல்பு. இதற்கு மூன்று முக்கியக் காரணங்கள் உள்ளன.

HPV வைரஸால் ஆண்களுக்கும் வாய், தொண்டை, ஆணுறுப்பு மற்றும் ஆசனவாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, தற்போது வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் அதிகரித்து வருவதற்கு இந்த வைரஸ்தான் முக்கியக் காரணமாகும்.

99 சதவிகித கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு இந்த HPV வைரஸே முக்கியக் காரணமாக அமைகிறது.

ஓர் ஆணுக்கு HPV தொற்று இருந்தால், திருமணத்திற்குப் பிறகு அவர் மூலமாக அவரின் மனைவிக்கு அந்த வைரஸ் பரவி, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஓர் ஆணுக்குத் தடுப்பூசி போடுவது என்பது அவரது வருங்கால வாழ்க்கைத் துணையையும் பாதுகாக்கும் செயலாகும்.

HPV வைரஸால் ஆண், பெண் இருபாலருக்கும் பிறப்புறுப்புகளில் மருக்கள் (Genital Warts) ஏற்படலாம். இந்தத் தடுப்பூசி அதையும் தடுக்கிறது.

இத்தகைய காரணங்களால்தான் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என இருபாலருக்கும் இந்தத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எந்த வயதில் போட வேண்டும்?

9 முதல் 14 வயது வரை இந்தத்  தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால் 2 டோஸ்கள் மட்டுமே போதும். இந்த இளம் வயதில் உடலானது தடுப்பூசிக்கு எதிராக மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சிறிய வயதில் போடுவது 90% வரை சிறப்பான பலனைத் தரும்.

15 முதல் 26 வயது  வயதில் போட்டுக்கொள்பவர்கள் 3 டோஸ்கள் போட வேண்டும்.

27 முதல் 45 வயது வரையிலானவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இளம் வயதில் உடலானது தடுப்பூசிக்கு எதிராக மிகச் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சிறிய வயதில் போடுவது 90% வரை சிறப்பான பலனைத் தரும்.

இந்தியாவில் கிடைக்கும் HPV தடுப்பூசி வகைகள்

தற்போது இந்தியாவில் மூன்று முக்கிய வகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன:

Gardasil 4: இது 4 வகையான HPV வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

Gardasil 9: இது 9 வகையான HPV வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இது இன்னும் கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

Cervavac: இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசியாகும். மற்ற தடுப்பூசிகளை விட இதன் விலை குறைவு. 

பக்க விளைவுகள் ஏதேனும் உண்டா?

இந்தத் தடுப்பூசியால் பெரிய அளவிலான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. மற்ற சாதாரண தடுப்பூசிகளைப் போலவே ஊசி போட்ட இடத்தில் லேசான வலி, மிதமான காய்ச்சல் அல்லது தலைவலி போன்றவை ஏற்பட்டு ஓரிரு நாள்களில் சரியாகிவிடும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சிறுவர், சிறுமியருக்கு இது போடப்பட்டு, மிகவும் பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ணகுமார்:

சென்னை, காமாட்சி மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்... இத்துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

தாளவாடி சாணியடி திருவிழா: பாரம்பர்ய நம்பிக்கையும்... மருத்துவர்களின் எச்சரிக்கையும்!

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள கும்டாபுரம் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி முடிந்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படும் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்துமா, இளைப்பு நோய் உள்ளவரா நீங்கள்... இப்படிச் சாப்பிட்டால் சமாளிக்கலாம்!

Doctor Vikatan: எங்கள் வீட்டில் மாமனார், மாமியார், இன்னும் சில உறவினர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. வானிலையில் லேசான மாற்றம் ஏற்பட்டாலே அவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு தீவிரமாகிவிடும். அவர்கள் எப்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கிலிருந்து மீண்டவர்கள் என்னவெல்லாம் சாப்பிடலாம்?

Doctor Vikatan: என் உறவினருக்கு சமீபத்தில் ஹார்ட் அட்டாக் வந்து, அதிலிருந்து மீண்டார். தனியே வசிக்கும் அவர், உணவு விஷயத்தில் எதில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும்... எப்படிச் சாப்பிட வேண்டும், எவற்றைத்... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளைப் பாதிக்கும் பால் ஒவ்வாமை... மாற்று உணவுகள் உதவுமா?

Doctor Vikatan: என் குழந்தைக்கு 8 வயதாகிறது. இந்த வயதிலேயே அவளுக்கு பால் ஒவ்வாமை அதாவது லாக்டோஸ் இன்டாலரென்ஸ் உள்ளதாகச் சொல்கிறார் மருத்துவர். பால் பொருள்களைத் தவிர்க்குமாறு சொல்கிறார். குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: Post Diwali Weight gain... இதையெல்லாம் செய்தால் பழைய எடைக்குத் திரும்பலாம்!

Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருப்பவர்களுக்கும், தீபாவளியை ஒட்டி, சில கிலோ எடை ஏறுவதைத் தவிர்க்க முடியாது. அப்படி அதிகரிக்கும் எடையானது சிலருக்கு அப்படியே தங்கிவிடுகிறது.... மேலும் பார்க்க

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: சேர்க்க, தவிர்க்க வேண்டிய உணவுகள் தெரியுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 65 வயது. அவருக்கு லேசான குளிர், மழை என வானிலை மாறினாலே மூட்டு வலி வந்து அவதிப்படுவது வழக்கம். இந்த வலிக்கு சிகிச்சைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும், உணவுமுறையில் ... மேலும் பார்க்க