செய்திகள் :

"டைகர் ஷெராப்பிற்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்"- ஆயுஷ்மான் குரானாவிற்கு பிஷ்னோய் கேங்க் மிரட்டலா?

post image

பாலிவுட் பிரபலங்களுக்குச் சமீப காலமாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறது. சமீபத்தில் மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது இக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாலும் இந்தச் சம்பவம் பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதோடு பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் தங்களது பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிற்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். இதையடுத்து அவரும் தனது பாதுகாப்பை அதிகரித்துள்ளார்.

போலீஸாரும் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். தற்போது மீண்டும் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவிற்கு, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த நபரொருவரிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது. ஆடியோ மூலம் வந்துள்ள மிரட்டலில், போலீஸாரால் உங்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க முடியாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் குரானா
ஆயுஷ்மான் குரானா

மும்பை போலீஸார் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அனில் பண்டிட் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் நபர், அந்த நடிகருக்கு மிரட்டல் விடுப்பது பதிவாகியுள்ளது.

டைகர் ஷெராப் நிலை ஏற்படும்

அந்த ஆடியோ செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதாவது: "நான் அனில் பண்டிட் பேசுகிறேன். லாரன்ஸ் பிஷ்னோயியின் தம்பி நான். உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால் நீங்கள் அதை எடுக்காமல் துண்டித்துவிட்டீர்கள். பரவாயில்லை, நாங்கள் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறோம், தயவுசெய்து எங்களிடம் பேசுங்கள். ஏதேனும் விஷயத்தைத் தீர்த்துக்கொள்ள விரும்பினால், தாராளமாகப் பேசலாம். ஆனால், நீங்கள் இத்தகைய அலட்சியமான போக்கைக் காட்டினால், டைகர் ஷெராபிற்கு நேர்ந்தது போன்ற நிலை உங்களுக்கும் ஏற்படலாம். சண்டிகரில் உங்கள் வீடு எங்கே இருக்கிறது.

நீங்கள் இப்போது எங்கே தங்கியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் உங்களிடம் ஒருமுறை பேச வேண்டும் அவ்வளவுதான். நீங்கள் எங்களுடன் பேசினால், அதன் பிறகு நாங்கள் உங்களைத் தொந்தரவு செய்யமாட்டோம். நீங்கள் பேசத் தயாராக இருந்தால், எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. உங்களிடம் பேசுவதற்காகவே நாங்கள் அழைத்தோம்.

எங்கள் செய்தியைக் கேட்ட பிறகு, தயவுசெய்து எங்களுக்குத் திரும்ப அழையுங்கள். அப்படிச் செய்யவில்லை என்றால், நீங்கள் வேறு வழியைத் தேர்ந்தெடுத்து போலீஸாரை நாட விரும்புகிறீர்கள் என்று நாங்கள் புரிந்துகொள்வோம். நீங்கள் போலீஸாரை அணுகலாம், அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

எவ்வளவு நாள் பாதுகாப்பு கொடுப்பார்கள்?

உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்பவர்கள், எவ்வளவு காலத்திற்கு உங்களைப் பாதுகாக்க முடியும்? எங்களிடமிருந்து தப்பித்து வாழ உங்களுக்கு ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம் தேவை. ஆனால், உங்களுக்குத் தீங்கு விளைவிக்க எங்களுக்கு ஒரே ஒரு நாள் அதிர்ஷ்டம் இருந்தாலே போதும். நீங்களோ, உங்கள் குடும்ப உறுப்பினர்களோ அல்லது எங்கள் கையில் சிக்கும் யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் ஒழித்துக்கட்டுவோம். எனவே, எங்களிடம் பேசி, பேச்சுவார்த்தை மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்த்துக்கொள்வது உங்களுக்கு நல்லது. உங்கள் அழைப்பிற்காக நாங்கள் காத்திருப்போம்” என்று தெரிவித்தார்.

லாரன்ஸ் பிஷ்னோய்
லாரன்ஸ் பிஷ்னோய்

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னதாக, ஆயுஷ்மான் குரானா மற்றும் துஷார் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வந்த நபரை மும்பை போலீஸார் கைது செய்தது. வைபவ் மிஷ்ரா என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஐடி பொறியாளராகப் பணிபுரிகிறார்.

அவர் புதன்கிழமை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். அவர், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் போல நடித்து, அந்தக் கும்பலின் பெயரில் பிரபலங்களுக்கு மிரட்டல் அடங்கிய ஆடியோ செய்திகளை அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

Ranbir Kapoor: "நடிப்பை விட்டு விலகுகிறேனா!?" - தெளிவுபடுத்திய ரன்பீர் கபூர்

நடிகர் ரன்பீர் கபூர் நடித்த 'ராமாயணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்... மேலும் பார்க்க

ராமாயணா: `சாய் பல்லவியின் சண்டை காட்சி' - முன்னாள் சீதை நடிகை தீபிகா சிக்லியா சொல்வது என்ன?

1987-ம் ஆண்டு வெளியான 'ராமாயணம்' தொலைக்காட்சித் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் மூத்த நடிகை தீபிகா சிக்லியா. ராமானந்த் சாகர் இந்தியில் இயக்கிய இத்தொடர் இன்றளவும் மக்களால் பெரிதும் ... மேலும் பார்க்க

கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; "சனாதன தர்மத்தில் இதுபோல்.."- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கிங் படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் முதல் பாடலை ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாட... மேலும் பார்க்க

Ramayana - Part 1 Review: பாலிவுட்டின் ஃபேன்டஸி விருந்து - இந்தியாவின் பிரமாண்ட சினிமா சாதிக்கிறதா?

அசுரக் குலத்தை அடிமைகளாக நடத்தும் தேவர்கள், இலங்கையையும் பிடித்துக்கொள்ள, அங்கிருக்கும் ராணியின் (ஷோபனா) புதல்வன் ராவணன் (யஷ்) பிரம்மனை நோக்கி தவம் இருக்கிறான். மானுடனைத் தவிர எந்த வகையிலும் தனக்கு மர... மேலும் பார்க்க

"அங்கு மூத்த நடிகருடன் ரொமான்ஸ் செய்ய வேண்டியிருந்ததும் எனக்குப் சவாலாக இருந்தது!" - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து நடித்த 'அக்கா' வெப் சீரிஸ் கடந்த வாரம் வெளியாகியிருந்தது. இப்படத்திற்காக அளித்த புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் தனது திரைப்பயணத்தில் தனக்குப் பிடிக்காத ஒரு கதாபாத்... மேலும் பார்க்க

Ramayana: "அதனால் 'ராமாயணா 2' 2028-ம் ஆண்டுக்கு தள்ளிப் போகிறது!" - தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகிறது. Ramayana Trailer - Yashஇந்நிலையில், படத்தின் ... மேலும் பார்க்க