செய்திகள் :

``தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" - அண்ணாமலை

post image

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி எம்.எல்.ஏ-வான ரவிசங்கரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது, கார்த்திக்குமாரை ரவி சங்கர், அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, தாக்கப்பட்ட கார்த்திக்குமார் பேசிய மற்றொரு வீடியோ, நேற்று காலை வெளியானது. அந்த வீடியோவில் துணை சபாநாயகரும் உடனிருந்தார்.

எம்.எல்.ஏ ரவிசங்கர்
எம்.எல்.ஏ ரவிசங்கர்

அதில் பேசிய கார்த்திக்குமார், ``துணை சபாநாயகர் என்னைத் தாக்கவில்லை. வீடியோ திரித்து வெளியிடப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தார். நேற்று மதியம் கார்த்திக்குமாரின் மற்றொரு வீடியோ வெளியானது. அதில் பேசிய அவர், ``துணை சபாநாயகர் ரவிசங்கர் என்னைத் தாக்கியது உண்மை. அப்படிச் சொல்லாவிட்டால், என்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினர். அதனால், வீடியோவில் அப்படி பேசினேன்" என்று கூறியுள்ளார். அத்துடன் நேற்று மாலை அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வீ தி லீடர் அமைப்பின் தலைமைச் சேவகர் அண்ணாமலை தன் எக்ஸ் பக்கத்தில்,``மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.

துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை.

தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.

பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

"பண்டிகை காலம் என்றால் கொலைகள் நடப்பது சகஜம் என்று நியாயப்படுத்தலாமா?"- ராஜ்மோகனுக்கு அதிமுக கண்டனம்

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 12 கொலைகள் அரேங்கேறிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து, "பண்டிகைக் காலங்களில் இத... மேலும் பார்க்க

'நாளைக்கு எல்லாரும் சென்னையில இருக்கணும்!' - எம்.எல்.ஏக்களுக்குத் திடீர் அழைப்பு விடுத்த விஜய்!

தவெக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் திடீர் ஆலோசனை கூட்டத்திற்காக நாளை சென்னை வருமாறு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்திருக்கிறார்.CM Vijayதீபாவளி தினமான கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் தவெக தலைமையிலிருந்து... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் விஜய்?" - கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் சமூக வலைத்தளப் பதிவில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்... மேலும் பார்க்க

பயிர்க் கடன் பெறுவதில் சிக்கல்... புதிய நிபந்தனைகளால் பரிதவிக்கும் குத்தகை விவசாயிகள்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளில் சுமார் 40 சதவிகிதத்தினர் குத்தகை நிலங்களில்தான் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களுடைய உழைப்பும் பங்களிப்பும் இல்லையென்றால், தமிழ்நாட... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: ஏரியில் மூழ்கி சிறுமிகள் உட்பட 5 பேர் மரணம் - காப்பகத்தின் அலட்சியத்தால் விபரீதம்?

திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் சாலையில் ஆணாய்பிறந்தான் கிராமம் உள்ளது. இங்கு, தமிழக அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் அங்கீகாரம்பெற்ற `டெர்ரே டெஸ் ஹோம்ஸ் ( TDH CORE ) கோர் ட... மேலும் பார்க்க

அண்ணா நூலகத்தில் லஞ்சு ஒழிப்புத் துறை சோதனை!

கடந்த திமுக ஆட்சியில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட, ‘பெரியார் அறிவுலகம்’ மற்றும் அறிவியல் மையத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைத்தார். இந்நி... மேலும் பார்க்க