செய்திகள் :

IPL 2027 இல் இருந்து விலக காரணம் என்ன? டிராவிஸ் ஹெட் விளக்கம்

post image

ஐபிஎல் 2027 தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் டிராவிஸ் ஹெட் தனது நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இருந்த மூன்று ஆண்டுகள் மிகச் சிறந்தவை. இந்தப் பயணத்தில் அங்கம் வகித்த அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இது மிகவும் ஒரு கடினமான முடிவு.

எனது வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் இதுவே சரியான முடிவு எனக் கருதுகிறேன். எனது தற்போதைய சர்வதேச கிரிக்கெட் இலக்குகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிடுதல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன்.

டிராவிஸ் ஹெட்
டிராவிஸ் ஹெட்

அணி உரிமையாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் சக வீரர்களுக்கும், அசைக்க முடியாத ஆரஞ்சு ஆர்மிக்கும் (ரசிகர்கள்) மிகப்பெரிய நன்றிகள்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நான் கழித்த காலத்தை எப்போதும் சிறந்த நினைவுகளுடனும் நன்றியுணர்வுடனும் திரும்பிப் பார்ப்பேன். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் உள்ள அனைவருக்கும் எதிர்காலத்தில் வெற்றிகள் மட்டுமே கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dhoni : 'ஒரே ஜெர்சி, ஒரே எண், ஒரே லெஜண்ட், என்றென்றும் எங்கள் தல.!'- தோனி குறித்து ருதுராஜ் எமோஷனல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி சி.எஸ்.கே அணியின் மென்டராக தோனி இருப்பார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறத... மேலும் பார்க்க

Dhoni : 'எங்களின் ஒரே ஏக்கம் இதுதான்..!' - தோனியின் ஓய்வு குறித்து ஸ்டாலின்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் இனி சி.எஸ்.கே அணியின் மென்டராக தோனி இருப்பார் என்றும் அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறத... மேலும் பார்க்க

Dhoni: 'IPL-ல் இருந்து ஓய்வுபெற்றார் தோனி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு; புதிய பொறுப்பு என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரருமான தோனி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.மகேந்திர சிங் தோனிதோனி, 2020 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில... மேலும் பார்க்க

U19: 'நாங்க அப்படி இல்ல..!'- இந்திய வீரர்களின் ஆக்ரோஷக் கொண்டாட்டம் குறித்து பாக்., முன்னாள் வீரர்

U19 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வென்ற பிறகு இந்திய வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடிய விதம் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் பேசியிருக்கிறார். ஓமன் நாட்டில் நடைபெற்ற 19 வயதுக... மேலும் பார்க்க

U19 ஆசியக் கோப்பை: கடைசிப் பந்து வரை 'த்ரில்' - பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்று இந்தியா சாதனை!

338 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய U19 அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றது. எனினும், கடைசி விக்கெட்டில் மோஹித் உல்வா - சிகுருபதி வெங்கடா இணை காட்டிய ஆட்டத்தா... மேலும் பார்க்க

IND VS NZ: 0 ரன்... 3 விக்கெட்டுகள்; 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நியூஸிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்தத் தொடரில் நியூஸிலாந்து அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வில் யங் சதம் மற... மேலும் பார்க்க