செய்திகள் :

தங்கமென ஜொலிக்கும் ஈரோடு மஞ்சள்; குவிண்டால் ரூ.24,000-ஐ கடந்து வரலாறு காணாத புதிய உச்சம்

post image

'மஞ்சள் மாநகரம்’ என்று அழைக்கப்படும் ஈரோட்டில், மஞ்சள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

ஈரோடு மஞ்சள் சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.24,211 முதல் ரூ.24,482 வரை விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு பதிவான ரூ.20,000 என்ற அதிகபட்ச விலையையும், 2024-ம் ஆண்டு உச்ச விலை நிலவரங்களையும் தாண்டி தற்போது இந்தப் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது‌.

இதனால், மஞ்சள் இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஈரோடு மஞ்சள்
ஈரோடு மஞ்சள்

விலை உச்சத்துக்கான காரணங்கள் குறித்து தெரிவித்த மஞ்சள் கொள்முதலாளர்கள், "ஈரோடு மாவட்டத்தில் உள்ள நான்கு முக்கிய மஞ்சள் ஏல மையங்களிலும் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற ஈரோடு விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.24,482 வரை ஏலம் போயுள்ளது.

விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.23,607 முதல் ரூ.23,799 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.21,708 வரையிலும் விற்பனையாகியுள்ளது. வரத்து குறைவு, தரமான மஞ்சளுக்கு நிலவும் கடுமையான போட்டி முக்கியக் காரணமாக உள்ளது.

எல்-நினோ பருவநிலை மாற்றம் மற்றும் சரியான சமயத்தில் போதிய பருவமழை இல்லாததால், ஈரோட்டின் கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் பாசனப் பகுதிகளில் வறட்சி நிலவியது. இதனால் பல விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கு மாறினர். மஞ்சள் சாகுபடி வெகுவாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் முக்கிய மஞ்சள் உற்பத்திப் பகுதிகளான மகாராஷ்டிராவின் மராத்வாடா மற்றும் தெலங்கானாவின் நிஜாமாபாத் ஆகிய இடங்களிலும் வறட்சியால் மஞ்சள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மஞ்சள்

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாகத் தேங்கியிருந்த பழைய மஞ்சள் கையிருப்பு தற்போது முழுமையாகக் குறைந்துவிட்டது. பண்டிகைக் காலத் தேவைகள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ள நிலையில், வரத்து குறைவாக இருப்பதால் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது‌. அடுத்த சில மாதங்களில் விலை கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்

விவசாயியின் வாழ்வாதாரத்திற்குப் பேரிழப்பு; தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி; Photo Album

நாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலிநாய்கள் கடித்து 17 ஆடுகள் ... மேலும் பார்க்க

முதல் போக சாகுபடிக்கு பச்சைக்கொடி! 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வைகை நீர் திறப்பு | Photos

45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வைகை நீர் திறந்ததால்45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வைகை நீர் திறந்ததால்45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வைகை நீர் திறந்ததால்45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு வைகை நீர் திறந்ததால்... மேலும் பார்க்க

திருநெல்வேலி: ஒரு கோடி விதைப்பந்துகள் தயாரிக்கும் பணி; ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவிகள் | Photos

திருநெல்வேலி: ஒரு கோடி. விதைப்பந்துகள் தயாரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற பள்ளி மாணவிகள்.!மீண்டும் ஒரு காவல் மரணம்: ``தவெக அரசின் ஏவல் துறையாக மாறியுள்ளது காவல்துறை" - டிடிவி தினகரன் மேலும் பார்க்க

'விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!' - மீண்டும் போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கங்கள்

கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதி படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் வருகிற நவம்பர் - 25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக 5... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: இயற்கை விவசாயத்தால் பசுமையான வறண்ட நிலம்; இளம் தம்பதி சாதனை! | Photos

பழ மரங்கள், நாட்டு மாடுகள் என இயற்கை வேளாண்மையில் வறண்ட நிலத்தை பசுமைச் சோலையாக மாற்றிய இளம் தம்பதிதேவி கன்னியாகுமரி அம்மன் கோயில்: நவராத்திரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய அம்மன் தலம்! மேலும் பார்க்க