அச்சன்கோவில்: மணிகண்ட முத்தய்யன் திருக்கோயில் கருப்பர் நிகழ்த்திய அற்புதம்!
கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் இடம்பெயறும் யானைகள்; வனத்துறையினர் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் யானைகள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்லும். அதேநேரம், யானைகளால் விவசாயிகளும், மேய்ச்சல்காரர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள், தானியங்கள் அவ்வப்போது யானைகளினால் சேதமடைந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சுற்றிவருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானைகள் கோபசந்திரம், போடூர், ஆழியாளம், கெட்டூர், இஸ்லாம்பூர, நாயனகொண்ட அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழையலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருகக வேண்டும்.
குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள் இரவு நேரஙகளில் தோட்டங்களில் காவல் பணிக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், இருசக்கர வானகத்தில் அந்த வழியாகச் செல்வோர் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், யானைகள் தென்பட்டால் அதன் அருகில் செல்லவோ விரட்டவோ முயற்சிக்கக் கூடாது, வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதேபோல் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள நேரலக்கோட்டை காப்புக்காட்டில் காட்டு யானைகளள் சுற்றித் திரிந்த நிலையில் அந்தக் கூட்டத்ததிலிருந்து பிரிந்து வந்த ஒற்றை யானை, பர்கூர் காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறது. இந்த யானையை இங்கிருந்து விரட்டி ஆந்திர வனப்பகுதியிலுள்ள அதன் கூட்டத்தோடு சேர்க்க வனத்துறையினர் முயற்சித்து வருகிறார்கள்.
அதனால், இக்காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் கவனமாக இருக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, தேன்கனிக்கோட்டை பகுதியில் சுற்றித் திரிந்த 10 காட்டு யானைகள் பேளேலம் கிராமத்தில் காவேரியப்பா என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி, பீன்ஸ் தோட்டத்திற்குள் புகுந்து அறுவடைக்குத் தயாரக இருந்த காய்கறிகளையும், செடிகளைத் தின்றும், மிதித்தும் நாசம் செய்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

















