செய்திகள் :

Bilkis Bano: “பழைய பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன...” - ஜாமீன் விவகாரத்தில் பில்கிஸ் பானு வேதனை

post image

2002-ம் ஆண்டு பில்கிஸ் பானுவைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளில் இருவரின் தண்டனையை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் பி.பி. வராலே ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 28-ம் தேதி ஜாமீன் வழங்கியது.

இது குறித்து நீதிமன்றம் பில்கிஸ் பானுவுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து கடந்த நவம்பர் 16-ம் தேதி பில்கிஸ் பானு மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பில்கிஸ் பானு
பில்கிஸ் பானு

“வலி, அதிர்ச்சி மற்றும் நம்பமுடியாத சூழலால் கண்களில் வழியும் கண்ணீருடனும், வார்த்தைகள் திக்கித் திணறுவதும்தான் இந்த அறிக்கையை நான் வெளியிடுகிறேன்.

என்னை அழைக்காமலும், என் தரப்பு வாதத்தைக் கேட்காமலும் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை—இரண்டாவது முறையாக—இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்பதை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை.

செய்தித்தாள்கள் மூலமாகத்தான் இந்த விஷயத்தையே நான் தெரிந்துகொண்டேன்.

என் உலகம், என் கைக்குழந்தை, என் குடும்பம், என் வீடு, மனிதநேயத்தின் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை என அனைத்தும் என்னிடமிருந்து கொடூரமாகப் பறிக்கப்பட்டபோது எனக்கு வயது வெறும் 19.

மெல்ல மெல்லப் புன்னகைக்கக் கற்றுக்கொண்டேன்!

அன்றிலிருந்து 24 நீண்ட ஆண்டுகளாக, எனக்காகவும், உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காகவும் நீதி கேட்டுத் திரும்பத் திரும்பப் போராடி வருகிறேன்.

என்னிடமே இருப்பதை நான் அறிந்திராத தைரியத்தை இந்த 24 ஆண்டுகளாகத் தேடிக் கண்டடைந்தேன் என்றால், அதற்குக் காரணம் என் பக்கம் நின்று குரல் கொடுத்த கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும் ஒற்றுமையும்தான்.

ஒவ்வொரு நீதிமன்றப் படியாக ஏறி இறங்கினேன்; ஒவ்வொரு முறை எனக்கு நீதி கிடைத்தபோதும், நீதித்துறையின் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டபோதும் நன்றியுணர்வோடு இருந்தேன்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அன்போடு, சிதைந்து போன என் வாழ்க்கையைச் சாம்பலிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பினேன்.

அமைதிக்காக ஏங்கினேன்; மெல்ல மெல்லப் புன்னகைக்கக் கற்றுக்கொண்டேன்.

என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல்...

ஆனால் இன்று, இத்தனை கஷ்டப்பட்டு நான் வென்றெடுத்த அதே நீதியை இழந்து நிற்பதாக உணர்கிறேன். பழைய பயங்கள் மீண்டும் தலைதூக்குகின்றன.

எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் குழந்தைகளுக்காகவும் நான் மீண்டும் பயப்படுகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்.

வாழ்நாள் முழுவதும் நீதிக்காக...

எனக்கு இந்தக் கொடுமையைச் செய்தவர்களின் தண்டனையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் எப்படி இவ்வளவு எளிதாக நிறுத்தி வைக்க முடியும்?

என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்காமல் எப்படி இருக்க முடியும்? நீதிமன்ற அறையில் என் குரல் ஒலிப்பதைக் கூட அவர்களால் எப்படி உறுதி செய்யாமல் போக முடிந்தது?

இந்த உத்தரவை எதிர்த்து நான் போராடுவேன்; நான் போராடியே ஆக வேண்டும். வாழ்நாள் முழுவதும் இந்தப் பயத்தோடும், ஆறாத வடுக்களோடும் வாழத் தகுதியற்ற என் குழந்தைகளுக்காக நான் இதைச் செய்கிறேன்.

பில்கிஸ் பானு அறிக்கை
பில்கிஸ் பானு அறிக்கை

உயிர் வாழ எல்லா உரிமையும் இருந்தும் பறிக்கப்பட்ட என் மூன்று வயது மகள் சலேஹாவுக்காகவும், நீதி கேட்கும் அவளது நினைவுகளுக்காகவும் நான் இதைச் செய்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள பெண்களுக்காக நான் இதைச் செய்கிறேன். ஏனென்றால், எந்தவொரு பெண்ணும், எந்தவொரு பாதிக்கப்பட்டவரும், எந்தவொரு குடிமகனும் தங்களின் உரிமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் இப்படி ஒரு முடிவில்லாத சோதனையைச் சந்திக்கக் கூடாது;

வாழ்நாள் முழுவதும் நீதிக்காகப் போராடிக் கொண்டே இருக்கக் கூடாது.” என வேதனை தெரிவித்துள்ளார்.

திருச்சி: பைக்கில் சென்ற விவசாயி வெட்டிக் கொலை; 2 சிறார் உட்பட 10 பேர் கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ள போதாவூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது: 46). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த இன்பராஜ் (வயது: 22), என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனா... மேலும் பார்க்க

உ.பி: திருட வந்த இடத்தில் இரட்டை கொலை... பாலியல் வன்கொடுமை; இளைஞரை சுட்டுப் பிடித்த போலீஸ்!

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜில் ரயில்வே டிக்கெட் விற்பனையாளர் சஞ்சீவ் வீட்டில் கடந்த 5ம் தேதி கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் வெளிவந்த 23 வயது வாலிபர் ஒருவர் பணம் திருடுவதற்காக நுழைந்தார். அப்போது அந்த வ... மேலும் பார்க்க

``ஸ்கூட்டர் கொடுத்து உதவிய மீனாட்சி; நிஷாந்த் சிக்கக் காரணமான டாட்டூ!" - காவல் ஆணையர் பேட்டி

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன், மாநகர தெற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, " நகைக்கடையில் ... மேலும் பார்க்க

பஞ்சாப் காவலர் கொலை; காவல்துறையினருக்கு மிரட்டல்; பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்?

சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்குச் சற்று முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அவரை அழைத்துச் செல்லும் சிசிடிவி காட... மேலும் பார்க்க

2 கிலோ தங்கம் கொள்ளை; எதிர்கடைக்காரரின் மாஸ்டர் பிளான்; முன்னாள் ஊழியர் உட்பட ஐவர் சிக்கிய பின்னணி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சாலா பகுதியில் 'வைஷ்ணவி ஜுவல்லரி' என்ற பெயரில் நகைக்கடை மற்றும் தங்கம் சுத்திகரிக்கும் தொழில் நடத்தி வருபவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நந்தகுமார். கடந்த வியாழக்கிழமை இரவு 10... மேலும் பார்க்க

சென்னை: நட்சத்திர ஹோட்டலில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய த.வெ.க-வினர் கைது - கட்சிப் பதவியும் பறிப்பு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இளம்பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். கடந்த 9-ம் தேதி அந்தப் பெண் வேலைக்கு வந்திருக்கிறார். அப்போது பைக்கில் ஹோட்டலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள், அந்தப் பெண்ணி... மேலும் பார்க்க