செய்திகள் :

Salman Khan: "யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?" - சல்மான் கான் காட்டம்

post image

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'மாத்ருபூமி' திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'மாத்ருபூமி' திரைப்படம் வரும் டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Salman Khan
Salman Khan

இப்படத்தின் டிரெய்லரின் நீளம் குறித்தும், அதில் ஏ.ஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் தரமற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்குச் சல்மான் கான் பதிலளித்திருக்கிறார்.

அவர் பேசுகையில், "டிரெய்லர் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சொல்பவர்களிடம் நான் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன்.

அப்படியென்றால், நீங்கள் அதை எத்தனை முறை பார்த்தீர்கள்? நாங்கள் எதைக் காட்டியிருக்கிறோம், எதைக் காட்டவில்லை என்று இவ்வளவு நுணுக்கமாகக் கணிப்பதற்கு, நீங்கள் குறைந்தது 15 முதல் 20 முறையாவது அந்த டிரெய்லரைப் பார்த்திருக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு எனது நன்றிகள்" என்றவர், "வெறும் டிரெய்லரை மட்டுமே வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிட்டீர்கள்.

முதலில் முழுப் படத்தையும் பாருங்கள். நம் நாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கதையைச் சொல்வதற்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.

salman khan
salman khan

ஆனால், படத்தைப் பற்றிய பேச்சு முழுவதும் அதன் தொழில்நுட்பத்தைப் பற்றியதாகத் திசைமாறிவிட்டது. நாங்கள் ஏ.ஐ பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் என்ன ஏ.ஐ நிபுணர்களா?

உங்கள் தகவலுக்காக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் படக்குழு உண்மையான இடங்களுக்குச் சென்று, மிகவும் கடுமையான சூழலில் அயராது உழைத்து இப்படத்தைப் படமாக்கியுள்ளது.

படம் வெளியாகும்போது, நம் ராணுவ வீரர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களையும், அவர்களின் வலியையும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் உணர்வுகளையும் ரசிகர்கள் கவனிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தயவுசெய்து திரையரங்கில் உட்கார்ந்துகொண்டு ஏ.ஐ மற்றும் கிராபிக்ஸ் குறைகளை ஆராயாதீர்கள். இந்தப் படம் அதைப் பற்றியது அல்ல" எனப் பதிலளித்திருக்கிறார்.

Alia Bhatt:``மிகவும் அவமரியாதையானது" - திருமண வாழ்க்கை குறித்த விமர்சனத்துக்கு ஆலியா பட் பதில்!

பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர்கள் ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர், கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அன்றிலிருந்து இவர்களின் நேர்காணல்... மேலும் பார்க்க

"200 கூட்டாளிகள் தயாராக இருக்கிறார்கள்"- அமிதாப் பச்சன், அபிஷேக்கிற்கு பிஷ்னோய் கேங்க் கொலை மிரட்டல்

பாலிவுட் பிரபலங்களைச் சமீப காலமாக குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டி வருகின்றனர். அவர்களது மிரட்டலால் நடிகர்கள் தங்களது பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கின்றனர். புத... மேலும் பார்க்க

ராமாயணா: ``ஜடாயுவின் சிறிய வார்த்தைதான்; ஆனால் 200 டேக் வரை எடுத்தேன்"- அனுபம் கெர் பகிர்ந்த அனுபவம்

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ‘ராமாயணா - பாகம் 1’, வெளியான இரண்டாவது வாரத்திலும் பாக்ஸ் ஆபீஸில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது. இப்படத்தில் ராவணனாக நடித்துள்ள யஷ்,... மேலும் பார்க்க

ராமாயணம் : ``சீதை சாய் பல்லவியின் ஆக்‌ஷன் காட்சி; ஆதாரம் இதுதான்" - இயக்குநர் நிதேஷ் திவாரி விளக்கம்

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், இப்படத்தில் இடம்பெ... மேலும் பார்க்க

"பதற்றமடையும் சமயங்களில் என்னை அமைதிப்படுத்துவது அவர்தான்" - கணவர் விக்கி கெளஷல் பற்றி கத்ரீனா கைஃப்

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது கணவர் விக்கி கௌஷல் தனக்கு அளிக்கும் ஆதரவு குறித்தும், தாய்மை மற்றும் நடிப்பு குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார். Vicky Kaushal - Katrina Kaif2021-ம்... மேலும் பார்க்க

`என்பெயரில் இருப்பதால் எனக்குத்தான் சொந்தம்' - அமிதாப்பச்சன் இல்லத்துக்கு உரிமைகோரும் தம்பி மனைவி

மும்பை ஜுகு பகுதியில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் வசித்து வருகிறார். அவர் அங்குள்ள ஜல்சா பங்களாவில் வசித்து வருகிறார். அந்த வீடு அமிதாப்பச்சன் மனைவி ஜெயாபச்சன் பெயரில் இருக்கிறது. ஆனால் இந்த வீட்டிற... மேலும் பார்க்க