செய்திகள் :

`மேற்கு வங்கம் இனி பஸ்சிம் பங்கா' - அமைச்சரவை ஒப்புதல் குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரி அறிவிப்பு!

post image

மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலகமான நபன்னாவில் நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மேற்கு வங்கம் என்ற மாநிலப் பெயரை பஸ்சிம் பங்கா என மாற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து முதல்வர் சுவேந்து அதிகாரி, அரசு மற்றும் நிர்வாக ஆவணங்களில் 'வெஸ்ட் பெங்கால்' (West Bengal) என்ற நீண்டகாலப் பெயர் மாற்றப்பட்டு, ஆங்கிலத்திலும் 'பஸ்சிம் பங்கா' (Paschim Banga) என்றே அழைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

மேற்கு வங்கம்

டிசம்பர் 4 முதல் 14-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ள சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடரில், டிசம்பர் 9-ம் தேதி இதற்கான தீர்மானத்தை பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்யவுள்ளது. சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். முன்னதாக, இடதுசாரி அரசும், அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசும் மாநிலத்தின் பெயரை 'பங்களா' என மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றின.

ஆனால், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மாநிலத்தின் பெயரை மாற்ற அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் தேவை எனக் கூறி 2019-ம் ஆண்டில் மத்திய அரசு இக்கோரிக்கையை நிராகரித்தது. தற்போது மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சி நடைபெறுவதால், இம்முறை பெயர் மாற்றத்திற்குத் தடையிருக்காது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

ஆபாச மெசேஜ்: ``ஆட்சியருக்கு நீதி; அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மாணிக்கம் தாகூர்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செ... மேலும் பார்க்க

`144 தடை' - திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வளைத்த காவல்துறை; நாளைவரை நீடிக்கும் தடை உத்தரவு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை முன்னிட்டு, இன்று நடைபெற உள்ள தீபத் திருவிழாவை ஒட்டி அப்பகுதி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு ... மேலும் பார்க்க

'காங்கிரஸ் MLAக்களுடன் மட்டும் 45 நிமிட ஆலோசனை!- விஜய்யின் எம்.எல்.ஏக்கள் மீட்டிங்கில் என்ன நடந்தது?

தவெக அரசு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் இங்கே. விஜய்சமீபத்தில்தான் தவெக எம்.எல்.ஏக்... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்!' - எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜய் கொடுத்த வாக்குறுதி!

தவெகவின் ஆதரவுக் கட்சி எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசித்திருந்தார். இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் போன்றவை குறித்தும்... மேலும் பார்க்க

'திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவைக்கல்தான்!' - தமிழக அரசு வெளியிட்ட ஆதாரம்!

கார்த்திகை தீப தினமான நாளை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: Red Zone-ஆக அறிவிக்கப்பட்ட மலைப் பகுதி; குவிக்கப்பட்ட போலீஸ்... விவரம் என்ன?!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று மட்டும் தீபம் ஏற்றலாம் என அண்மையில் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய... மேலும் பார்க்க