செய்திகள் :

"திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிறார்களா என பார்க்கச் செல்வேன்" - நயினார் நாகேந்திரன் அதிரடி

post image

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. ஆனால், நேற்று அந்த மனு விசாரிக்கப்படாத நிலையில், இன்று தீபம் ஏற்றப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் சுமார் 5000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நயினார் நாகேந்திரன்

மதுரை மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163வின் கீழ், திருப்பரங்குன்றம் உள்பட, மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கும், போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது அனுமதியின்றி யாரும் ஏறக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் காலையில் நெல்லை டவுனில் உள்ள வீட்டிலிருந்து வெளியே சென்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற பணிகளுக்காக வழக்கறிஞர் உடையுடன் சென்ற தன்னை காரணம் இன்றி காவல்துறை கைது செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

நயினார் நாகேந்திரன்

இதனிடையே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நான் வீட்டுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளேனா என்பது தெரியவில்லை. இது குறித்து யாரும் எனக்கு எதுவும் தெரிவிக்கவும் இல்லை. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலையில் இன்று தீபம் ஏற்ற வில்லை என்றால் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முழுக்க முழுக்க கிறிஸ்தவராக செயல்படுகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நயினார் நாகேந்திரன் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படாவிட்டால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாத அல்லது நிர்வாகத்தைப் பற்றித் தெரியாத ஒரு முதலமைச்சராக விஜய் இருப்பார். திருப்பரங்குன்றம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டியது கடமை. ஆனால் இதற்காக கைது, வீட்டுக்காவல் என பரபரப்பை ஏற்படுத்துவது தேவையற்றது.

தீர்ப்பை நிறைவேற்றினாலே போதுமானது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீபம் ஏற்றினால் போதுமானதாக இருக்கும். நான் திருப்பரங்குன்றம் செல்ல உள்ளேன். நீதிமன்ற உத்தரவுப்படி மலை மீது தீபம் ஏற்றுகிறார்களா இல்லையா என்பதை பார்ப்பதற்காக செல்ல திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி: ``துணிச்சல்' மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்" - எம்.பி கனிமொழி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: 144 தடை உத்தரவு; வீட்டுக்காவலில் இந்து அமைப்பினர் - பதற்றத்தில் மதுரை!

திருப்பரங்குன்றத்தில் உள்ள தூணில் கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் செய்து தர வேண்டுமென உ... மேலும் பார்க்க

``விஜய்யின் போலி பிம்பங்கள், அவர் MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது" - எடப்பாடி பழனிசாமி

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்ச... மேலும் பார்க்க

Coimbatore Day: அன்று வாழத் தகுதியற்ற இடம்... இன்று `தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' - HBD கோவை

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு வரை பேரூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சிற்றூரே கோயம்புத்தூர். கோவன் என்ற பழங்குடித் தலைவன் ஆண்ட இந்த ஊர், கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோயம்புத்தூராக... மேலும் பார்க்க

ஆபாச மெசேஜ்: ``பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்?" - தமிழிசை, அண்ணாமலை காட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதாக செய்திகள் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பானது. இந்த விவகாரம் குறித்து பேசிய அருள் விக்னேஷ், ``இப்படி ஒரு சம்பவம் ந... மேலும் பார்க்க

ஆபாச மெசேஜ்: ``மைனாரிட்டி அரசைக் காப்பாற்ற... ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால்.!" - ஸ்டாலின் காட்டம்

சென்னையை சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், `` கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தவெக - எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செ... மேலும் பார்க்க