செய்திகள் :

Nvidia CEO: `ஜென்சன் ஹுவாங் கம்பேக்' - ட்ரம்ப் தலையீடும் முதலீடும்! | என்ன நடந்தது?

post image

உலகப் புகழ்பெற்ற Nvidia என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி சிப் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங்.

2025 மே மாதம், தைவானில் உள்ள ஓர் உணவகத்தில் ஜென்சன் ஹுவாங், சிங்கப்பூரின் 'மெகாஸ்பீட்' (Megaspeed) நிறுவன முன்னாள் பெண் அதிகாரியான ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் உணவருந்த சென்றுள்ளார். அந்த விருந்தின்போது ஜென்சன், ஆலிஸின் இடுப்பில் கைபோட்டு கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். இதை அவரது மகளே தனது கைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளார்.

Jensen Huang - Nvidia

ஆலிஸ் ஹுவாங், சீனாவின் அரசு உளவு அமைப்பிற்கு (MSS) நெருக்கமானவர் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகித்தது. என்விடியா நிறுவனத்தின் அதிநவீன AI சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆலிஸ் மூலமாக சுமார் 4.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கணினி வளங்கள் மற்றும் சிப்கள் சீன மின்-வணிக நிறுவனமான 'அலிபாபா'விற்குச் சட்டவிரோதமாகக் கைமாறியிருக்கலாம் என்ற சர்ச்சை எழுந்தது.

அதைத் தொடர்ந்து Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார். நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஹுவாங் இனி என்விடியா நிர்வாகக் குழுவிலும் இருக்க மாட்டார் என அப்போது அறிவிக்கப்பட்டது. மேலும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான (CFO) கோலெட் கிரெஸ் பொறுப்பேற்றார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதைத் தொடர்ந்து, எக்ஸ் பக்கத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ``என்விடியாவின் விநியோகச் சங்கிலியை ஜென்சன் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். அவற்றில் பல ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமானவை அல்ல; ஜென்சனுடனான வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் நடந்தவை. ஜென்சன் இல்லையென்றால், அவற்றில் சில முக்கியமான ஒப்பந்தங்களாவது கைநழுவிப் போக வாய்ப்புள்ளது." என எச்சரித்திருந்தார்.

இதையடுத்து ஜென்சன், ``நிறுவனம் விரும்பினால் தலைமைச் செயல் அதிகாரியாகத் தொடரத் தயார்’ என்று அறிவித்தார். ஆனால், இதை Nvidia நிறுவனம் விரும்பவில்லை. ஜென்சன் கூறியதை முற்றிலும் நிராகரித்து, ``ஜென்சனை மீண்டும் பணியில் அமர்த்தும் எண்ணம் இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், ``என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் குழு, ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் பணியில் அமர்த்தும் என நான் நம்புகிறேன். அது அந்த நிறுவனத்திற்கும், அதேபோல அமெரிக்காவிற்கும் மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். எனவே, ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிப்பதற்காக Nvidia நிர்வாகக் குழுவுடன் நான் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைச் சம்மதிக்க வைப்பேன்” என்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்து CNBC தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ட்ரம்ப், ``தேசியப் பாதுகாப்பு குறித்து Nvidia நிர்வாகக் குழு கேட்ட கேள்விகளுக்குத் என்னிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் உத்தரவாதம் அளித்தேன். அவர் பதவியில் இருப்பது அச்சுறுத்தலா என மக்கள் கேட்கிறார்கள். உண்மையில் அவரை இழப்பதுதான் அச்சுறுத்தல்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

Jensen Huang - Nvidia

அதைத் தொடர்ந்து, ஜென்சன் ஹுவாங் மீண்டும் தலைமைச் செயல் அதிகாரி, தலைவர் மற்றும் இயக்குநர் குழு உறுப்பினராக உடனடியாகப் பொறுப்பேற்பதாக Nvidia அறிவித்துள்ளது. அவரது வருகையைத் தொடர்ந்து, நேற்று வர்த்தகத்தில் Nvidia நிறுவனத்தின் பங்குகள் 31 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்தன. நாஸ்டாக் (Nasdaq) குறியீடும் 6 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்தது. அலுவலகம் திரும்பிய ஹுவாங்கிற்கு ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தனது மறுநியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஜென்சன் ஹுவாங், ``எனது இல்லாமையின் போது நிறுவனத்தைச் சிறப்பாக வழிநடத்திய கோலெட்டிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அதேவேளையில், மீண்டும் பதவிக்கு வந்தாலும், என் மீதான விசாரணை தொடரும் என நிர்வாகக் குழு தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டு உளவுத்துறை தொடர்பான புகார்கள் குறித்து சுயாதீன இயக்குநர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அடங்கிய குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணை முழுமையாக முடியும் வரை தொடரும். இதற்குத் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்." என ஜென்சன் ஹுவாங் தெரிவித்துள்ளார்.

Jensen Huang - Nvidia

என்விடியா வாரியத் தலைவர் ஹார்வி சி. ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நிறுவனத்தை வழிநடத்த ஜென்சனே சரியான நபர். அமெரிக்க அரசாங்கத்தின் உயர் மட்டங்களிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அவரால் தேசியப் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட பிறகே இந்த நியமணம் நடைபெற்றது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலகியபோது Nvidia பங்குகள் கடுமையாகச் சரிந்து, அமெரிக்கப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான S&P 500 வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

ஆனால், நேற்று அவர் மீண்டும் நியமிக்கப்பட்டதும் Nvidia பங்குகள் 31% உயர்ந்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பில் சுமார் 1 டிரில்லியன் டாலரை ஈர்த்தது. இது ஆசியப் பங்குச் சந்தைகளிலும் தொழில்நுட்பப் பங்குகளின் உயர்வுக்கு வழிவகுத்தது.

அதிபர் டிரம்ப் Nvidia நிறுவனத்தில் செய்துள்ள தனிப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களும் கவனம் பெற்றுள்ளன. அமெரிக்க அரசின் நிதி அறிக்கைகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ட்ரம்ப் பல்வேறு கணக்குகள் மூலம் 85 முறை சுமார் 23 மில்லியன் முதல் 86 மில்லியன் டாலர் மதிப்பிலான Nvidia பங்குகளை வாங்கியுள்ளார். மேலும், அவற்றில் சிலவற்றை விற்றதன் மூலம் 3.5 மில்லியன் முதல் 10.2 மில்லியன் டாலர் வரை லாபம் ஈட்டியுள்ளார். இதன் அடிப்படையில், Nvidia-வின் இந்த திடீர் முடிவிற்குப் பின்னணியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அழுத்தம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Nvidia
Nvidia

எனவே, ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என இரு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஜனவரியில் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராகப் பொறுப்பேற்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் ஹக்கீம் ஜெஃப்ரீஸ், ``தனிப்பட்ட நிதி ஆதாயத்திற்காக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை ட்ரம்ப் நிர்வாகம் விலைபேசுவதை அனுமதிக்க மாட்டோம். இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்" என எச்சரித்துள்ளார்.

இதேபோல், செனட்டர் எலிசபெத் வாரன் ``ட்ரம்பின் பொறுப்பற்ற செயல்களில் இதுவும் ஒன்று" என விமர்சித்துள்ளார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டான் பேக்கன் மற்றும் டாம் காட்டன் ஆகியோரும், ``சீனாவுக்கு நமது தொழில்நுட்பத்தைத் தாரைவார்க்கக் கூடாது. இந்த விவகாரம் இன்னும் முடியவில்லை" எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, டிசம்பர் 1-ம் தேதி பிரதிநிதிகள் சபைக் குழுக்கள் முன்பும், அதன்பின் செனட் வங்கிக் குழு முன்பும் ஹுவாங் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

25 நாள்களில் 52 லட்சம் திருமணங்கள்... ₹7.5 லட்சம் கோடி வர்த்தகத்தை எதிர்பார்க்கும் இந்தியா!

இந்தியாவில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான 25 நாள்களில் சுமார் 52 லட்சம் திருமணங்கள் நடைபெறவுள்ள நிலையில், இதன் மூலம் ₹7.5 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என அகில இந்திய வர்த்தகர்கள் க... மேலும் பார்க்க

"நிறுவனம் முடிவெடுத்தால் மீண்டும் CEO ஆவது எனக்கு கௌரவம்" - ஜென்சன்; Nvidia-வின் பதில் என்ன?

சீன உளவாளி, பெண் ஊழியர்களிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் என்று கடந்த வாரம் அமெரிக்க தொழிற்நுட்ப நிறுவனமான என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்தக்... மேலும் பார்க்க

ஜென்சனின் மகள் டு அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி.! Nvidia-வின் அதிகார மாற்றத்தில் என்ன நடக்கிறது?

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவில், 33 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சன் ஹுவாங்கின் வெளியேற்றம் பெரும் தலைமை மாற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. அடுத்த தலைமை... மேலும் பார்க்க

Nvidia: உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த தொழில்நுட்ப அரசன்; Jensen Huang-ன் எழுச்சியும் வீழ்ச்சியும்

உலகின் முன்னணி AI சிப் நிறுவனமான என்விடியாவின் (Nvidia) இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்துவந்த ஜென்சன் ஹுவாங், தன்னைச் சுற்றியெழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பதவி விலகியுள்ளது தொழில... மேலும் பார்க்க

"Nvidia CEO ஜென்சன் ஹுவாங்கை வேலைக்கு எடுப்பது எனக்கு கௌரவம்" - எலான் மஸ்க் பதிவு

உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் மற்றும் பிசினஸ் உலகம் தற்போது Nvidia நிறுவனத்தை மிகவும் உற்றுநோக்கி வருகிறது. என்விடியா பங்குகள் நல்ல பங்குகள் என்பதால் இந்த முக்கியத்துவம் இல்லை.என்விடியா நிறுவனத்தின் த... மேலும் பார்க்க

"மனைவிக்கு துரோகம் செய்துவிட்டேன்" - NVIDIA CEO; சீனாவின் உளவு சதியில் சிக்கினாரா? புது தகவல்கள்!

கடந்த அக்டோபர் 29-ம் தேதி, தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், Nvidia நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜென்சன் ஹுவாங் சீனாவின் உளவுச்சதியில் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.சீனாவின் உ... மேலும் பார்க்க