செய்திகள் :

"தவெக MLA அருளைக் காப்பாற்ற முயன்ற முதல்வர் விஜய் மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன்

post image

பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் இல்லத்திற்கு நேரில் சென்று கலாட்டா செய்ததாகவும் கடந்த சில வாரங்களாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மக்களை ஏமாற்றி வந்தனர். த.வெ.க கூட்டணியில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்’ என அவருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்நிலையில்தான், பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது உண்மை என்பதும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார் என்பதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

‘பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுவிட்டு எனது ஆட்சியில் யாரும் தப்பிவிட முடியாது’ என்று வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ-வைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இப்படி ஒரு மோசமான முதலமைச்சரை, பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்த முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரைப் பாதுகாக்க முயன்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்து விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை முதலமைச்சரே பாதுகாக்க முயற்சித்தது அம்பலமாகிவிட்டதால், இந்த வழக்கை அவரது தலைமையிலான தமிழ்நாடு காவல் துறை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

"பதவி விலகச் சொல்லுங்க..." - முதல்வருக்கு சீனியர் அமைச்சர்கள் அட்வைஸ்!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகி, த.வெ.க ஆட்சிக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. எம்.எல்.ஏ மீது பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கொடுத்திருக்கும் ஆபாச மெசேஜ் புகாரின் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு ச... மேலும் பார்க்க

"கள்ளக்குறிச்சி தவெக MLA-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதாகக் கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மெசேஜ் தொடர்பாக கள்ளக்குறிச்சி ... மேலும் பார்க்க

பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம்

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும... மேலும் பார்க்க

தவெக MLA மீது வழக்கு: ``4 மாதமாக குற்றவாளியைப் பாதுகாத்த மாநில அரசு" - ஸ்டாலின் காட்டம்

'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி தவெக MLA மீது வழக்கு: "கால தாமதம் செய்யாமல் கைது நடவடிக்கை வேண்டும்" - அன்புமணி

"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், "கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ்... மேலும் பார்க்க

'வதந்தி, அய்யோ பாவம், புகார் வந்தால்...' - கள்ளக்குறிச்சி MLAவுக்கு ஆதரவாக ஒலித்த தவெக குரல்கள்!

நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு கலெக்டருக்குத் தொந்தரவு செய்யும் விதத்தில் மெசேஜ் அனுப்பிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் எம்.எல்... மேலும் பார்க்க